Gossip: ஒவ்வொரு பிரபலங்களும் தான் உயரந்தது மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினையும் சினிமாவில் உயர்த்த தான் நினைக்கிறார்கள். அப்படி சுள்ளான் நடிகர் தன்னுடைய கேரியரில் பிஸியாக இருக்கும் போது தன்னுடைய அக்கா மகனை வளர்க்க நினைத்தார்.
ஏற்கனவே நடிப்பில் ஹிட்டடித்து வந்த சுள்ளான் நடிகர் டைரக்ஷனில் ஒரு ரவுண்ட் வர ஆசைப்பட்டார். ஒரு படத்தில் தானே நடித்து அதை ஹிட்டடித்து விட்டார். அடுத்த படத்தில் இன்னொரு பிரபலத்தினை ஏன் வளர்த்து விட வேண்டும் என நினைத்தாராம்.
அதனாலே பள்ளி படிப்பை முடிக்காத தன்னுடைய அக்கா மகனை உள்ளே அழைத்து வந்தார். சுள்ளான் நடிகரின் முதல் படம் போல அதே லுக்கில் இவரையும் இறக்கி விட்டார். உச்ச நடிகர் மற்றும் நம்பர் நடிகையின் மகளாக நடித்த நடிகையை இறக்கினார்.
கடைசியில் இருவரும் தற்போது ட்ரோல் மெட்டிரியலாக மாறி இருக்கின்றனர். சுள்ளான் நடிகரின் அப்பாவே தன்னுடைய பேரனின் படிப்பை கெடுத்துவிட்டார் என ஓபனாக ஸ்டேட்மெண்ட் விட்டு பிரச்னைக்கு தூபம் போட்டார். அதை தொடர்ந்து சுள்ளான் நடிகர் கடுப்பில் இருக்கிறாராம்.
என்னை என்னுடைய அண்ணன் முதல் படத்தில் இறக்கிய போது இதை விட அசிங்கமாக திட்டு வாங்கி இருக்கேன். ஆனால் இங்கு அப்படி கூட இல்லை. எல்லாமே நல்லாத்தான் போகிறது. நெகட்டிவ் விமர்சனம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். அப்போதான் அடுத்த வாய்ப்பும் வரும்.
இதனால் மற்றவர்கள் பேசினால் கூட ஓகே. குடும்பத்தினரே இப்படி இறங்கினால் அடுத்தகட்ட வாய்ப்பு எப்படி வரும்? நான் திட்டு வாங்கிய போது சும்மா தானே இருந்தீங்க எனவும் கண்டித்து இருக்கிறார். தன்னை போல ஒரு ஹிட் ஹீரோவாக அக்கா மகனை மாற்றும் வரை ஓயமாட்டாராம்.