Gossip: ஆத்தா கொஞ்சம் வாயை அடக்கும்மா… பிரைட் நடிகைக்கு ஆர்டர் போட்ட சன் நடிகர்!

by Akhilan |
Gossip: ஆத்தா கொஞ்சம் வாயை அடக்கும்மா… பிரைட் நடிகைக்கு ஆர்டர் போட்ட சன் நடிகர்!
X

Gossip: தமிழ் சினிமாவில் தன்னுடைய இடத்தை இழந்து விட்டு ஆட்டம் கண்டிருக்கும் சன் நடிகரின் அடுத்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில் முதல்வையாக தன்னுடைய மனைவி பிரைட் நடிகைக்கு பெரிய ஆர்டர் ஒன்றை போட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க பலரும் படாத பாடு பட்டு கொண்டு இருக்கும் நிலையில் இருந்த இடத்தை மொத்தமாக இழந்திருக்கிறார் சன் நடிகர். அக்கட தேசத்து படத்திற்கு ஆசைப்பட்டு இங்குள்ள ரசிகர்களை மொத்தமாக இழந்துவிட்டார்.

இந்த நேரத்தில் தான் இவருடைய வரலாற்று திரைப்படம் ஓவர் பில்டப்புடன் ரிலீஸ் ஆக படம் முதல் காட்சியை தாண்டி ரசிகர்களிடம் விமர்சனத்தை குவிக்க தொடங்கியது. அப்படியே விட்டிருந்தால் கூட இரண்டு மூன்று நாட்களில் மீண்டும் வரவேற்பை பெற வாய்ப்பு இருந்திருக்கும்.

சும்மா இருக்காமல் இவருடைய மனைவி இறங்கி வந்து கணவருக்கு சப்போர்ட் செய்கிறேன் என்ற பெயரில் மற்ற நடிகர்களை தாக்கி பேசியது அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஒவ்வொரு இடத்திலும் அவர் மனைவி சொன்ன ஸ்டேட்மெண்டை வைத்து சன் நடிகரை கலாய்க்க தொடங்கினர்.

தமிழ் சினிமாவில் தனக்கு முக்கியமான ஆட்களை பெரிய இடத்தில் வைத்துக்கொண்டு இந்த நடிகர் கேம் ஆடுவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் வெளியானது. இந்த சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்த பாடல் இல்லாத நிலையில் அவருடைய அடுத்த திரைப்படம் தயாராகிவிட்டது.

வழக்கத்திற்கு மாறாக இப்படத்தின் பாடல்கள் எல்லாம் இதுவரை சூப்பர் ஹிட். இயக்குனரும் இதுவரை வெற்றி படங்களாக கொடுத்திருக்கும் நிலையில் இந்த படத்திற்கும் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் பிரச்சனை நடிகர் குடும்பத்தில் இருப்பதால் உடனே மனைவிக்கு ஒரு கண்டிஷனை போட்டு இருக்கிறார்.

படம் ரிலீஸ் ஆகி சில நாட்கள் செல்லும் வரை அது குறித்து தன் குடும்பத்தை சேர்ந்த யாரும் பேசக்கூடாது என கறாராக சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்து சில நாட்களாகவே பிரைட் நடிகை தானும் பேசுகிறேன் என்ற பெயரில் வாழ்க்கை கொடுத்த திரையுலகத்தை அசிங்கப்படுத்தி வருகிறார்.

இதனால் இந்த படத்திற்கும் அவர் ஏதாவது கருத்தை சொல்லி கொஞ்ச நஞ்சம் இருக்கும் மார்க்கெட்டையும் மொத்தமாக துடைத்துக் கொள்ள சன் நடிகர் ஆசைப்பட மாட்டார் என்பதால் இந்த ஆர்டர் ரசிகர்களிடம் சற்று ஆறுதலாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது.

Next Story