Gossip: ஒவ்வொரு முறையும் அப்பாவால் அசிங்கப்படும் சன் நடிகர்… அடுத்த பஞ்சாயத்தை கூட்டிய மனைவி!

by Akhilan |   ( Updated:2025-04-27 06:31:03  )
Gossip: ஒவ்வொரு முறையும் அப்பாவால் அசிங்கப்படும் சன் நடிகர்… அடுத்த பஞ்சாயத்தை கூட்டிய மனைவி!
X

Gossip: பெரும்பாலும் முன்னணி நடிகர்களுக்கு வெளியிலிருந்து தான் பிரச்சனை வரும். ஆனால் ஒரு சில நடிகர்களுக்கு பிரச்சனை வீட்டிலேயே இருக்கிறது. அப்படிதான் சன் நடிகர் ஒவ்வொரு பட விழாவிலும் சாமி நடிகர் அப்பாவால் அசிங்கப்பட்டு கொண்டே இருக்கிறார்.

ஒரு காலத்தில் கோலிவுட்டில் முன்னணி நடிகர்கள் என பட்டியல் போட்டால் அதில் முக்கிய இடத்தில் இருப்பார் சன் நடிகர். அப்படி ஒரு இடத்தில் இருந்தவர் தேவையே இல்லாத ஆசையால் அக்கட தேசம் போய் எல்லாத்தையுமே இழந்து இங்கு வந்து இருக்கிறார்.

இந்த பிரச்சனையே அவர் தலை மீது இருக்க தற்போது அவர் தந்தையால் தொடர்ச்சியாக அசிங்கப்பட்டு கொண்டிருப்பது அவருடைய ரசிகர்களுக்கே கடுப்பை ஏற்படுத்தியிருப்பதால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டும் இருக்கிறதாம்.

சன் நடிகர் பெரிய பட்ஜெட்டில் நடித்த அந்த வரலாற்று படம் ஓவர் பில்டப்பை கொடுத்து பல்பு வாங்கியது. அந்த நிகழ்ச்சியில் கூட சன் நடிகரை அவருடைய அப்பா இவன் படிக்க மாட்டான் என கல்லூரி முதல்வர் சொன்னார். நான் காலில் விழுந்து சீட்டு வாங்கி கொடுத்தேன்.

ஒரு கட்டத்தில் நாலு அரியர் வைத்தான். கெஞ்சி பாஸ் செய்து பின்னர் ஒரு கடையில் கூட்டி கிளீன் செய்யும் வேலை பார்த்தான் என்றார். இப்போ என்ன சாதிச்சிட்டாருனு இந்த கதை என பலரும் கலாய்த்து வந்தனர். தற்போது மீண்டும் அந்த மூன்று எழுத்து பட விழாவில் பேசி இருந்தார்.

மகன் தான் உடம்பை கட்டுமஸ்தாக வைத்திருக்கிறார். வேறு எவனாவது வச்சானா என ஓவர் மிதப்பில் பேசி இருந்தார். இது சர்ச்சையாகி பலரும் அந்த நடிகர் லிஸ்ட்டில் முதல் சில இடங்களில் கூட ஏன் இந்த பந்தா என கடுப்பை கொட்டி வருகின்றனர்.

ஏற்கனவே மார்கெட் ஆட்டம் கண்டு வரும் நிலையில் இவர் பேச்சு இன்னும் நமக்கு பிரச்னையை தான் ஏற்படுத்தும் இனி உங்க அப்பா வாயை அடக்குங்க என பிரைட் நடிகை கணவரை கண்டித்து இருப்பதாகவும் சேதி.

Next Story