Connect with us

நீ நடிச்சு கிழிச்சதெல்லாம் போதும்… உடனே கல்யாணம் பண்ணிக்கோ… வாரிசு நடிகைக்கு ஆர்டர் போட்ட அம்மா நடிகை….!

gassip news

Cinema News

நீ நடிச்சு கிழிச்சதெல்லாம் போதும்… உடனே கல்யாணம் பண்ணிக்கோ… வாரிசு நடிகைக்கு ஆர்டர் போட்ட அம்மா நடிகை….!

திரையுலகில் அறிமுகமான ஆரம்ப காலத்தில் அந்த வாரிசு நடிகையின் நடிப்பை பலரும் கலாய்த்து வந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் பொங்கி எழுந்த அந்த நடிகை என் நடிப்பையா கிண்டல் பண்றீங்க அப்படினு கோபப்பட்டு வெறித்தனமா நடிச்ச அந்த பயோபிக் படம் தான் நடிகைக்கு பெயர் வாங்கி கொடுத்தது.

அதுமட்டும் இல்லாம அந்த ஒரே படத்துல நடிகைக்கு ஏராளமான விருதுகளும் கிடைச்சது. இனிமே நம்ம மார்க்கெட் எங்கேயோ போகப்போகுதுனு கனவு கண்ட நடிகைக்கு ஏமாற்றம் தான் கிடைச்சது. ஆமாங்க அந்த ஒரு படத்துக்கு அப்புறம் நடிகையோட நடிப்புல வெளியான எந்த படமும் வெற்றி பெறவில்லை.

சமீபத்துல கூட ஓடிடி தியேட்டர் என நடிகையின் நடிப்பில் வெளியான இரண்டு படங்களும் அடுத்தடுத்து தோல்விய சந்திக்க பிளாப் நடிகை என்ற பெயரும் நடிகையை தொற்றி கொண்டது. இதுதவிர தற்போது நடிகைக்கு அவரது அம்மா மூலம் மேலும் ஒரு புதிய சிக்கல் உருவாகி உள்ளதாம்.

அதாவது சமீபத்தில் நடிகையின் நடிப்பில் ஓடிடியில் வெளியான அந்த படத்தில் ரேப் சீனில் நடிகை நடித்ததால் அம்மா நடிகை செம கடுப்பில் உள்ளாராம். மேலும் இப்படியெல்லாம் நடித்தால் முன்னணி ஹீரோக்கள் எப்படி உன்னை புக் செய்வார்கள் என்று நடிகையை திட்டி தீர்த்து விட்டாராம்.

அதோடு விடாமல் நீ நடிச்சதெல்லாம் போதும் நான் சொல்ற மாப்பிள்ளைக்கு கழுத்த நீட்டு என ஆர்டர் போட்டு விட்டாராம். இதனால் நடிகை என்ன செய்வதென தெரியாமல் விழித்து வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top