
Cinema News
வெளிநாட்டில் கணவர்… இயக்குனருடன் நெருக்கம் காட்டும் நடிகை…! உருவான புதிய சர்ச்சை…!
படங்களில் துளியும் கவர்ச்சி காட்டாமல் குடும்பப்பாங்கான கேரக்டரில் மட்டுமே அந்த நடிகை நடித்திருந்தாலும், பெரும்பாலான படங்களில் குறும்புக்கார சேட்டை நிறைந்த பெண்ணாக தான் நடித்திருப்பார். அதனாலோ என்னவோ அந்த நடிகையை பலருக்கும் பிடித்து விட்டது.
அடுத்தடுத்து டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த அந்த நடிகை
சினிமா பிரபலம் ஒருவரை காதலிப்பதாக கூறிவிட்டு திடீரென வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அந்த சமயத்தில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இருப்பினும் திருமணத்திற்கு பின்னர் நடிகையின் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக தான் சென்றது. என்ன ஒன்று கணவர் வீட்டார் திருமணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாது என கூறியதால் நடிகையும் கணவர் குடும்பத்தின் சொல்லுக்கு கட்டுப்பட்டு சில காலம் நடிக்காமல் இருந்தார்.
ஆனால் நடிகையின் கணவர் வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லவே வீட்டில் போர் அடிப்பதாக கூறி மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க அனுமதி வாங்கிய நடிகை தற்போது பட வாய்ப்புகளை தேடி வருகிறார். ஆனால் நடிகைக்கு அம்மா, பெரியம்மா, சித்தி, அக்கா போன்ற கேரக்டர்களே கிடைத்தது.
இதனால் நடிகை இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதினெட்டு வயசு பொண்ணே தோற்றுப் போகும் அளவுக்கு படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதனை கண்ட நடிகையின் தீவிர ரசிகரான அந்த இயக்குனர் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த லீடு ரோலில் நடிகையை ஹீரோயினாக புக் செய்தாராம்.
இதனால் இயக்குனர் மீது ஈர்ப்பு ஏற்பட்ட அந்த நடிகை இயக்குனரை கட்டிப்பிடித்து போட்டோ போட்டதுடன், தொடர்ந்து இயக்குனருடன் தனியாக பார்ட்டிகளுக்கு செல்வது, அவருடன் ஊர் சுற்றுவது என தனிப்பட்ட முறையில் அதிக நெருக்கம் காட்டி வருகிறாராம். இது எங்க போய் முடியபோகுதோ தெரியவில்லை என கோலிவுட்டில் கிசுகிசுத்து வருகிறார்கள்.