Connect with us

சம்பளத்தை கூட குறைச்சுக்குறேன்… பட வாய்ப்பு மட்டும் குடுங்க… கடைசில அந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலமையா?

Cinema News

சம்பளத்தை கூட குறைச்சுக்குறேன்… பட வாய்ப்பு மட்டும் குடுங்க… கடைசில அந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலமையா?

கோலிவுட்டில் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டார் படம் என்பதால் அந்த இளம் நடிகைக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. சூப்பர் ஸ்டார் படத்தை தொடர்ந்து இரண்டாவதாக ஒரு மாஸ் ஹீரோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த நடிகை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்தார்.

அறிமுகமான இரண்டு படங்களும் பெரிய ஹீரோக்களின் படங்கள் என்பதால், அந்த நடிகைக்கு ஓரளவிற்கு மார்க்கெட் இருந்தது. ஆனால் அந்த மூன்றாவது படம் தான் நடிகையின் திரைவாழ்க்கைக்கு ஆப்பு வைத்து விட்டது பாவம் நடிகை.

ஆசை ஆசையாக அந்த ஒல்லி நடிகருடன் நடிகை நடித்த அந்த படம் ஓடிடியில் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமல்ல நடிகையின் நடிப்பும் பலரால் விமர்சனம் செய்யப்பட்டது. இதனால் தற்போது நடிகையை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்கி வருகிறார்களாம்.

இதனால் நடிகை சமீபத்தில் மாலத்தீவு சென்று உச்சக்கட்ட கவர்ச்சியில் புகைப்படங்கள் எடுத்து சோசியல் மீடியாவில் ஷேர் செய்து பட வாய்ப்புகளை கைப்பற்ற முயற்சி செய்தார். ஆனால் அந்த முயற்சி வேலைக்காகாததால் தற்போது புதிய முடிவை ஒன்றை எடுத்துள்ளாராம்.

அதன்படி நீங்கள் கேட்பதை விட தாராளமாகவே கவர்ச்சி காட்டுகிறேன். சம்பளத்தையும் பாதியாக குறைத்து கொள்கிறேன் என நடிகை தயாரிப்பாளர்களிடம் கூறி வருகிறாராம். ஆனால், தயாரிப்பாளர்களோ ஆள விடு தாயே என தெறித்து ஓடியதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top