Gossip: சின்ன தலீவருக்கு செம ஐடியாப்பா… ஆனா அதுல இப்படி ஒரு கேடித்தனமா?

Gossip: தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் எப்போதுமே தங்களுக்கு ஹிட் வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டணி சரியாக அமைந்துவிட்டால் அவர்களை விடவே மாட்டார்கள். ஆனால் சின்ன தலீவர் ஸ்டைல் எப்போதுமே தனிதானே மீண்டும் அதை நிரூபித்து விட்டார்.
குட்டி நடிகராக வந்து ஹிட்டடித்த வாரிசு நடிகருக்கு இளசு கூட்டம் ஜாஸ்தி. ஆனால் அவருக்கு வரவேற்பு கிடைத்த நேரத்தில் மொத்ததையும் விட்டு பிரேக் எடுத்தார். அவருக்கு நடிகைகளுடன் இருந்த காதல் தோல்வியே காரணமாக கூறப்பட்டது.
அந்த தோல்விக்கு பிறகு எல்லா படங்களுமே தோல்வி, உடை எடை பெருத்து இவர் அவ்வளவுதான் என நினைத்தனர். ஆனால் தன்னுடைய கம்பேக் மூலம் ஹிட்டடித்தவர். பலரை வாயில் கை வைக்க வைத்தார். தற்போது மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து அசத்தி வருகிறார்.
ஆனால் தலீவர் அடிக்கடி ஆள் அடையாளம் தெரியாமல் எஸ்கேப் ஆகிவிடுகிறார். எங்கடா போனாரு என எல்லாரும் கேட்க தொடங்கும் போது மீண்டும் வருவார். அவருடைய கடைசி படம் வெளிவந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இப்போ இருக்கும் டாப் இயக்குனர்கள் எல்லாம் ஒரு படத்தை ஓகே செய்து வைத்து விட்டார்.
அப்போ அந்த இயக்குனர் குறித்து பேசும்போது இவர் பெயரும் தொடர்ந்து அடிப்படும் என்பதால் யார் கதை சொல்ல வந்தாலும் உடனே ஓகே என மண்டையை ஆட்டுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது மாத்திரம் அல்ல இதே டெக்னிக்கை மியூசிக் டைரக்டரிலும் வைத்து இருக்கிறாராம்.
அவருடைய அடுத்த படங்களுக்கு இசையமைக்க தமிழ் சினிமாவில் தற்போது டிரெண்ட்டிங்கில் இருக்கும் மியூசிக் டைரக்டர்களை ஒப்பந்தம் செய்து வைத்து இருக்கிறார். அப்போ அவர்களால் இவரும் எப்போதுமே வைரல் புகழிலே இருக்கலாம் என்பதும் இவர் நெருங்கிய வட்டாரத்தின் ஐடியாவாம்.
இருந்தும் எந்த படத்தின் ஷூட்டிங்கிற்கும் தலீவர் எட்டிக்கூட இன்னும் பார்க்கவில்லையாம். தமிழ் சினிமாவின் பெரிய தலை படத்தில் இருப்பதால் அவருக்கு பயந்து பம்மி நடித்து கொடுக்கிறாராம். மற்றவர்கள் தங்கள் நிலை என்னவாகுமோ என கலக்கத்தில் உள்ளனர்.