விவாகரத்தான வாரிசு நடிகரை மடக்கிய தமிழ் நடிகை.. திடீர் திருமணத்தின் பின்னணி..

Gossip: சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்வதும் பின்னர் இன்னொரு பிரபலத்தை திருமணம் செய்து கொள்வதும் எல்லா மொழி திருமா துறைகளிலும் வாடிக்கையாக தான் நடந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டின் செல்லப் பெண்ணாக பட்டம் படத்தின் மூலம் அறிமுகமான சமத்தான நடிகை அக்கட தேசத்தில் வாய்ப்புக்காக சென்றார். அங்கு அவருக்கு வாழ்க்கையே அமைந்ததை பார்த்த தமிழ் ரசிகர்கள் மிகப்பெரிய சந்தோஷத்தில் ஆழ்ந்தனர்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் சர்ஜரியா செஞ்சிருக்கேன்… இங்க தொட்டு பாருங்க… ஓபனா பேசிட்டாரே நயன்!..
இரு மத முறைப்படி அந்த தம்பதி திருமணம் செய்து கொள்ள அவர்களை எல்லா மொழி ரசிகர்களும் கொண்டாடியிருந்தனர். ஆனால் யார் கண் பட்டதோ நான்கு வருடத்தில் இருவரும் தங்களுடைய சமூக வலைதளம் மூலம் ரசிகர்களிடம் பிரிவதாக அறிவித்தனர்.
ஆனால் அவர்கள் சேர்ந்து விடுவார்கள் என்பதை பல ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. சமத்தான நடிகையின் வாரிசு கணவரோ சைடு கேப்பில் ஒரு ரூட்டை விட்டு இருக்கிறார். பிரபல நாவல் திரைப்படத்தில் நடித்த நடிகையுடன் சீக்ரெட் டேட்டிங் போனதே இவர்களுடைய விவாகரத்துக்கு காரணம் என பலர் கிசுகித்தனர்.
இதையும் படிங்க: மே 1ஆம் தேதிக்கு இவ்வளவு டிமாண்ட்டா?!… லிஸ்டில் இணைந்த சூப்பர் ஸ்டார்!… ஆட்டம் சூடு பிடிக்குது!…
அப்போதெல்லாம் அமைதியாக இருந்த இவர்கள் திடீரென தங்களுடைய இரண்டாவது திருமண நிச்சயதார்த்த அறிவிப்பை வெளியிட்டனர். அந்த பதிவில் வந்த பல ரசிகர்கள் இதுதான் அப்பவே தெரியுமே. இதற்காக தானே அந்த சமத்தான நடிகை நீங்க கழட்டி விட்டிங்க என தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர்.
இரு தரப்புமே வாய் திறக்காமல் அமைதி காத்து வந்தது. ஆனால் வாரிசு கணவர் மீண்டும் தன்னுடைய ரூட்டை மாற்ற எண்ணியதால் தான் இந்த திடீர் திருமணம் என தகவல்கள் கசிந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் 3000 கோடி சொத்துக்கு அதிபதியான நடிகரை விடுவதற்கு நாவல் நடிகைக்கு விருப்பம் இல்லாததால் பிக் பாஸ் நடிகரிடம் பஞ்சாயத்து வைத்து உடனே தன்னுடைய திருமண வேலைகளை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.