Connect with us

Gossips

கொஞ்சம் கூட இரக்கம் இல்லாத இலங்கை சினிமாகாரர்கள்.! என்ன காரியம் செய்ராங்க தெரியுமா.?!

தற்போதைய காலகட்டத்தில்  நமது அண்டை நாடான இலங்கை நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அங்கு மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அதனை நாம் தினமும் டிவியில் பார்த்து கொண்டிருக்கிறோம்.

அப்படி டிவியில் பார்க்கும் நமக்கே ஐயோ பாவம் மக்கள் என்ன செய்வார்களோ என்று மனம் பதறுகிறது. ஆனால் அங்குள்ள சினிமாக்காரர்கள் இதனை பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் தங்களது அடுத்தடுத்த படங்களின் ஷூட்டிங் நடத்தி வருகின்றனராம்.

இதையும் படியுங்களேன் – என் பேர்ல இன்ஷூரன்ஸா.?! திடுக்கிட்ட விஜய் ஆண்டனி.! இது என்னடா புதுசா இருக்கு.?!

அதிலும், குறிப்பாக முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இதில் மேலும் ஒரு செய்தி என்னவென்றால், இந்த 800 திரைப்படத்தில் தமிழ் நட்சத்திரங்கள் வெகு சிலரும் நடித்து வருகின்றனராம்.

இலங்கை நாட்டு மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வரும் இந்த வேளையில், 800 திரைப்படத்தின் சூட்டிங் தேவைதானா என்று பல சினிமாக்காரர்கள் புலம்பி வருகின்றனர். அதிலும் நமது தமிழ் சினிமாக்காரர்களும் இருக்கிறார்கள் என்ற செய்தி மேலும் வருத்தமடைய செய்கிறது என்று பிரபல சினிமா பத்திரிக்கை இணையதளம் ஒன்று வீடியோவாக வெளியிட்டுள்ளது.

author avatar
Manikandan
Continue Reading

More in Gossips

To Top