gossip
Gossip: தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகர் அரசியல் பக்கம் தாவி இருக்கிறார். இருந்தும் அவரின் குடும்ப பிரச்னை புகைந்து கொண்டே இருக்கிறது. வீட்டில் நடந்த ஒரு பிரச்னை குறித்தும் கசிந்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் நடிகர் சமீபகாலமாகவே கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கிக்கொண்டே இருக்கிறார். இன்னும் பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அரசியல் பக்கம் போவதாக அறிவித்தார்.
அதை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள் அடுத்த அறிவிப்பால் தான் ஷாக்காகியது. அரசியல் போவது எல்லாம் ஓகே. இனிமேல் படம் நடிக்க மாட்டேன் என அதிர்ச்சி கொடுத்தார். அந்த வகையில் அவருடைய மக்கள் ஹீரோ திரைப்படம் கடைசி படமாக வெளியாகி வருகிறது.
இதற்கிடையில் தன்னுடைய அரசியல் வேலைகளிலும் மும்முரமாக செயல்படுத்தி வருகிறார். அந்த சார் படம் வரை வீட்டில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தது. ஆனால் அதன் பின்னர் இவருடன் மனைவி, பிள்ளைகள் என யாருமே இல்லை என தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்தது.
அதிலும் மகன் திடீரென இயக்குனராக அவதாரம் எடுத்தார். அவ்வளவு பெரிய வீட்டை சேர்ந்த மகன் தனி ஆளாக படத்தின் அறிவிப்பில் கையெழுத்து போட்டார். அதை தொடர்ந்து தன்னுடைய ஹீரோ அப்பாவையும், இயக்குனர் தாத்தாவையும் அழைக்கவே இல்லை.
இந்நிலையில் வீட்டின் மொத்த பிரச்னைக்கும் காரணம் மூன்றெழுத்து நடிகருடன் நெருக்கமாக இருக்கும் தயாரிப்பாளர் ஒருவரும், அவர் கட்சியின் மூன்றெழுத்து அடைமொழி கொண்ட ஒருவரும் என்பதால் இயக்குனர் மகன் சட்டையை பிடித்து சண்டை போட்டுள்ளார்.
இதில் கடுப்பான ஹீரோ மகனை வீட்டை விட்டே துரத்தி விட்டதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளது. இதனால் தான் மகன் பல இடங்களில் அப்பாவை தவிர்த்து கொண்டே இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…