
Gossips
Gossip: அந்த சூப்பர்ஸ்டார் நடிகரின் லாஸ்ட் பங்ஷனில் இது நடக்க கூடாது… நடந்து வரும் சதி!
Gossip: சூப்பர்ஸ்டார் நடிகரின் அரசியல் எண்ட்ரி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் இதை தங்களுடைய படத்துக்கு பயன்படுத்திக்கொள்ள தயாரிப்பு நிர்வாகம் செம பிளான் செய்து வரும் நிலையில் அதை செய்ய கூடாதுனு ஒரு சதி திட்டம் நடந்து வருவதாக தகவல்.
தற்போது தமிழ் சினிமாவில் 300 சி சம்பளம் வாங்கும் அந்த நடிகர் திடீரென சினிமாவை விட்டு அந்த பக்கம் செல்ல இருப்பதால் அவர் ரசிகர்கள் கடைசி படத்தினை மிகப்பெரிய வெற்றியாக மாற்ற திட்டமிட்டு இருக்கின்றனர். அதனால் கடைசி படமான அந்த படம் பெரிய ஹிட் அடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர்ஸ்டார் நடிகர் தன்னுடைய கடைசி படத்தை எந்த சொதப்பலும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே பல இயக்குனர்களிடம் கதை கேட்டு இருக்கிறார். கிட்டத்தட்ட அந்த லிஸ்ட்டில் இருந்த 13க்கும் அதிகமான இயக்குனர்கள் எல்லாருமே டாப் ஹிட் இயக்குனர்கள்.
கிட்டத்தட்ட கடைசி படம் என்பதால் கண்டிப்பாக அவருடைய புதிய எண்ட்ரியை மையமாக வைத்தே இந்த படத்தை உருவாக்க வேண்டும் என்பதே நடிகரின் திட்டமாக இருந்ததால் இன்னொரு மூன்றெழுத்து வாரிசு நடிகருக்கு வைத்திருந்த அரசியல் கதையை இவரிடம் சொல்ல பல மற்றங்களுக்கு பின்னர் இவரை புக் செய்தார் சூப்பர்ஸ்டார் நடிகர்.
இந்நிலையில் இவருடைய மக்கள் ஹீரோ படத்தின் கடைசி ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு தமிழில் முதல் இடத்தில் இருக்கும் எல்லா நடிகர்களையும் அழைத்து வர திட்டமிட்டு இருக்கின்றனர். முன்னணியில் இருக்கும் மூன்றெழுத்து சூப்பர் நடிகரை கேட்க இருக்கின்றனர்.

ஆனால் ஏற்கனவே இருவருக்கும் அந்த பறவை பிரச்னை இருப்பதால் அவர் வருவது சந்தேகமே எனக் கூறப்படுகிறது. வாரிசு மூன்றெழுத்து பழம்பெரும் நடிகரை கேட்க அவரோ இப்போ தமிழ்நாட்டின் பெரிய கூட்டணியில் இருப்பதால் அவர்களை எதிரியாக நினைக்கும் இந்த ஸ்டார் நடிகர் பங்ஷனுக்கு வர வாய்ப்பே இல்லை.
இதில் இவரின் போட்டி ஹெட் நடிகர் இப்போலாம் வெளியில் தலையை காட்டினாலும் இவர் பங்ஷனுக்கு வந்தால் நம்மையும் அந்த லிஸ்ட்டில் இணைப்பார்கள் என்ற யோசனையில் இருக்கிறார்களாம். அந்த வாரிசு சூரிய நடிகரை அழைக்கவும் வாய்ப்பு இருக்கிறதாம்.
ஆனால், ஏற்கனவே இந்த நடிகரின் ரசிகர்கள் சூரிய நடிகரை பல வாரங்களாகவே ரொம்ப மோசமாக விமர்சித்து வருகின்றனர். இதனால் இவர் குடும்பம் அதற்கு ஒப்புக்கொள்ள வாய்ப்பே இல்லையாம்.
இதனால் அடுத்தக்கட்ட நடிகர்கள் வந்தால் நமக்கும் சினிமா கேரியர் ஆட்டம் காணும் என்பதால் நடிகர்கள் வர பெரிய அளவில் வாய்ப்பே இல்லை என்பதுதான் இப்போதைய கோலிவுட் வட்டாரத்தின் பேச்சாக இருக்கிறது.