Categories: Gossips

சிக்குன்னு இருக்க செல்லம்!…பளிச் அழகில் சொக்க வைக்கும் லாஸ்லியா…

சொந்த நாடு இலங்கை என்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானவர் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவின் மீது காதல் கொண்டு அப்பா, அம்மாவிடம் திட்டு வாங்கி ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார்.

ஓவியாவுக்கு பின் சமூகவலைத்தளங்களில் இவருக்குதான் ஆர்மியெல்லாம் உருவானது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஃபிரெண்ட்ஷிப் என்கிற ஒரு படத்தில் மட்டுமே நடித்தார். அதன்பின் கே.எஸ்.ரவிக்குமார் நடித்த கூகுள் குட்டப்பா படத்தில் நடித்தார்.

ஒருபக்கம், அவ்வபோது மற்ற நடிகைகளை போல போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கருப்பு வெள்ளை நிற உடையில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா