Connect with us

Gossips

அந்த பிரபல நடிகருடனே தங்கி விட்ட நடிகை.. கடுப்பான கணவர்.. விவாகரத்து செய்ய அதிரடி முடிவு?

சினிமாவில் நடிகைகள் நடிகர்களை திருமணம் செய்துக் கொள்வதும், பின்னர் சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து செய்துக் கொள்வதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் செய்துக் கொண்ட பிரபல நடிகை ஒருவர் தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கசிந்துள்ளன.

நடிகை ஒரு பக்கம் மற்ற நடிகர்களுடன் படு நெருக்கமாக நடிக்கத் தொடங்கி விட்டார். திருமணத்துக்கு பிறகு இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வந்த அந்த நடிகை தனது கணவரிடம் இருந்து பிரிந்து செல்வதற்காகவே இப்படி அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு படுமோசமாக நடிக்க ஆரம்பித்து விட்டார் என பேச்சுக்கள் எழுந்தன.

கணவருக்கு நோ சொன்ன நடிகை

மேலும், தனது படங்களில் ஹீரோயினாக நடிகையை கணவர் நடிகர் நடிக்க அழைத்தும் கால்ஷீட் இல்லை என கணவருக்கே டாட்டா காட்டி விட்டு தொடர்ந்து அந்த பெரிய ஹீரோவின் படங்களில் தாராள கவர்ச்சியுடன் நடித்து வருகிறார் அந்த நடிகை.

திருமணம் ஆகி சில ஆண்டுகள் ஆன நிலையில், இன்னமும் குழந்தையை பற்றிய பேச்சுக்களே இல்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் வெடித்து பிரிவதற்கு காரணமே குழந்தை பற்றிய பேச்சு தான் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

விரைவில் விவாகரத்து

இந்நிலையில், பிரபலம் ஒருவரே பிரபல நடிகரும் நடிகையும் விரைவில் விவாகரத்து செய்து பிரியப் போவதாக அதிரடியாக அறிவித்து பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

அந்த பெரிய ஹீரோவின் தனி பங்களாவில் தான் தற்போது அந்த பிரபல நடிகை கடந்த சில மாதங்களாக தங்கி வருவதாகவும், கணவரை தனியாக தவிக்க விட்டு விட்டு நடிகருடன் உல்லாசமாக இருந்து வருவதாகவும் பலத்த பேச்சுக்கள் சினிமா உலகையே ஆட்டிப் படைத்து வருகின்றன.

சமீப காலமாக திரைப்பட விழாக்களுக்கும், கணவர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் மனைவி கலந்து கொள்வதே இல்லை என்றும் கணவர் நடிகரை மனைவி நடிகை அந்த பெரிய ஹீரோவுக்காக ஒட்டுமொத்தமாக கழட்டி விட்டார் என்றும் அந்த பிரபலம் எக்கச்சக்க பிட்டு போட்டு திரையுலகினரை பதைபதைக்க வைத்துள்ளார்.

 

author avatar
Saranya M
Continue Reading

More in Gossips

To Top