1. Home
  2. Gossips

சன் நடிகரின் ’ஸ்கூல்’ பட டைரக்டர் செய்யும் அழிச்சாட்டியம்… 20 லட்சத்துக்கு நாமம் போட்ட சம்பவம்


Gossip: அக்கட தேசத்தில் பெரிய ஹீரோவாகிவிடலாம் என ஓவர் ஆசையில் இருப்பதை கோட்டை விட்ட நடிகர் இனி நமக்கு கோலிவுட் தான் எல்லாம் என திரும்பிவிட்டார். இதற்கு காரணம் அவரின் சமீபத்திய பிரீயட் படம் பெரிய அளவில் பல்ப் வாங்கியது.

தன்னுடைய கூட்டத்தை வைத்து விமர்சிப்பவர்களை வாய் அடைக்க செய்ய முடிவெடுத்தார். ஆனால் எதுவுமே வேலைக்கு ஆகாமல் போனது. உடனே சன் நடிகர் தொடர்ச்சியாக கோலிவுட்டில் கதை கேட்கும் வேலையை தொடங்கினார்.

படத்தை மட்டும் இல்லாமல் இயக்குனர்களையும் வித்தியாசமாக பிரிக்க தொடங்கினார். ரேடியோவில் இருந்து சினிமாவிற்கு சின்ன வீடுப்பில் வந்த நடிகர் ஸ்கூல் படம் மூலம் ஹீரோவாக வெற்றி பெற்றார். தொடர்ந்து அவரும் வித்தியாசமான கதைகளில் நடித்து ஹிட் அடித்து வந்தார்.

அவரை தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குனராக அறிவித்து ஆச்சரியம் கொடுத்தார் சன் நடிகர். இப்படத்தின் மீது தற்போது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்த்து உருவாகி இருக்கிறது. சன் நடிகரும் இப்படத்தில் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறார். இப்படத்தை சன் நடிகரின் ஆஸ்தான குழு தான் தயாரிப்பதால் மீண்டும் பெரிய அளவில் கல்லா கட்டலாம் என திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் இயக்குனர் அவதாரம் எடுத்த பின் ஸ்கூல் பட நடிகருக்கு ஓவர் கடுப்பு, திமிரென அழிச்சாட்டியம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஒரு காட்சிக்கு 500 பேரை கேட்க தயாரிப்புக் குழு சிக்கனம் காட்டி 200 பேரை தான் தயார் செய்திருக்கிறது.

உடனே எந்தவித பேச்சும் இல்லாமல் ஷூட்டிங் இருக்கு பேக்கப் சொல்லிவிட்டு கிளம்பி இருக்கிறார் ஸ்கூல் பட நடிகர். அந்த குறிப்பிட்ட நாளில் ஷூட்டிங் செலவும் மட்டுமே பட குழுவிற்கு 25 லட்சம் மேல் வீணாகி விட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் தற்போது தகவல்கள் பரவி வருகிறது.

ஆரம்பத்திலேயே இப்படி முகத்தை காட்டும் இயக்குனர் இந்த படத்தை ஒழுங்காக முடித்துக் கொடுப்பாரா என தற்போது தயாரிப்பு குழுவிற்கு ஏகப்பட்ட பயம் உருவாகி இருக்கிறதாம். இதனால் சன் நடிகர் தன்னுடைய டீமிடம் அடக்கி வாசிக்கும்படி ஆர்டரும் போட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

[9:30 PM, 2/3/2025] Joanshia Dinesh: நடிகை பத்மப்ரியா ஒரு படப்பிடிப்பின் கிளைமேக்ஸ் காட்சியில் உணர்வு பூர்வமாக நடிக்கவில்லை எனக் கூறி அவரை இயக்குனர் கன்னத்தில் அறைந்திருக்கிறார். இதில் அதிர்ச்சி அடைந்த அவர் இயக்குனர் மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தாராம். கடைசியில் பத்மபிரியா தான் அந்த இயக்குனரை அடித்தார் என விஷயம் திரித்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடைய எல்லா பட வாய்ப்புகளும் விடுங்கப்பட்டு மொத்தமாக நடிப்பில் இருந்து விலக்கப்பட்டார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.