Gossip: என்ன முடிச்சி விட்டியேப்பா… ஜூனியர் ஒல்லி நடிகரால் புலம்பும் நம்பர் நடிகையின் கணவர்!...

Gossip: தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் மிக முக்கிய சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்தவர் ஜூனியர் ஒல்லி நடிகர். பயங்கரமான விலங்கு பெயரில் அவர் நடித்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் வெற்றியை அவருக்கு பெற்று கொடுத்தது.
இந்த நடிகர் ஆரம்பத்தில் இயக்குனராக தொடங்கினாலும் அவருக்கு நடிப்புதான் பெரிய அளவில் கை கொடுத்து வருகிறது. தன்னுடைய ரசிகர்கள் பட்டாளத்தை இந்த கால ஜென்சி கிட்ஸை கவர் செய்யும் விதமாகவே அவருடைய படங்களின் கதைகள் வந்த வண்ணம் இருந்தது.
முதல் இரண்டு படங்களை கூட எல்லா விதமான ரசிகர்களும் ரசித்தனர் என்பது தான் உண்மை. ஆனால் இந்த முறை வெளியாகியிருக்கும் அந்த மூன்றெழுத்து திரைப்படத்தை எப்படி கதையாக இவர் ஒப்புக்கொண்டார் என்பதே பலருக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
முதல் பாதியிலேயே படம் முடிந்து விடுகிறது. கதையை இழுக்க வேண்டும் என்பதற்காகவே இரண்டாம் பாதியில் தேவையில்லாத பல விஷயங்களை சொல்லி ரசிகர்களை கடுப்பேற்றி இருக்கின்றனர். ஹீரோவாக இவர் படத்திற்கு நியாயம் செய்திருக்கலாம்.
ஆனால் ஒரு புதுமுக இயக்குனராக இயக்குனரின் திரைக்கதை பல இடங்களில் அடிவாங்கி இருக்கிறது. எதை எடுத்தாலும் போட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் தற்போது இந்த திரைப்படத்தையும் 100 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து விட்டதால் படக்குழு தற்பெருமை பேசுவதையும் பார்க்க முடிகிறது.
பெரும்பாலும் இந்த படத்திற்கு அதிக வசூல் செய்ததற்கு காரணமே படத்தின் ஹீரோதான். காதல் படத்தைக் கூட காமெடியாக சொல்லி கைதட்டி வாங்கியவரின் படம் கண்டிப்பாக தீபாவளி போன்ற ஒரு பெரிய விழாவில் வெளிவரும்போது ரசிகர்கள் அதை பார்க்க ஆர்வம் காட்டுவது வழக்கம்தான்.
ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் படத்தின் காட்சிகளும் குறைக்கப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க இந்த நடிகரின் அடுத்த இயக்குனர் சர்ச்சை நம்பர் நடிகையின் கணவர். இந்த தீபாவளிக்கு அவருடைய மூன்றெழுத்து திரைப்படம் தான் வெளியாகி இருக்க வேண்டும்.
ஆனால் இந்த திரைப்படத்தின் எல்லா வேலையும் முடிந்துவிட்ட காரணத்தால் இதை முதலில் ரிலீஸ் செய்த கொள்ளலாம் என இரு படக் குழுவும் முடிவு செய்து இந்த படத்தை முதலில் வெளியிட்டுள்ளனர். தற்போது சர்ச்சை நம்பர் நடிகையின் கணவர் படம் ஆட்டம் கண்டு இருக்கிறது.
ஏற்கனவே அந்த இயக்குனரின் கடைசி படம் பெரிய அளவில் கதை இல்லை என்றாலும் நடிகர்களின் தேர்வால் படம் தேறியது. தற்போது இந்த நடிகருக்கும் இப்படி ஒரு பிரச்சனை உருவாகி இருக்க மூன்றெழுத்து படத்திற்கு முக்காடு போடும் நிலை உருவாகி இருப்பதாக தயாரிப்பாளர் புலம்பி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.