Connect with us
GMani

Cinema History

கவுண்டமணியின் கலக்கல் நகைச்சுவை… அடேங்கப்பா இந்தப் படத்துலயா இவ்ளோ பேசினாரு?!

90ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமே கிடைத்த வரப்பிரசாதம் நகைச்சுவை ஜாம்பவான் கவுண்டமணி. இவர் படத்தில் வந்தாலே கலகலப்பும் நமக்குள் வந்துவிடும். இவர் செய்யும் நக்கலும், நய்யாண்டித்தனமும் பார்க்க பார்க்க ஒரு ஜாலி மூடுக்குள் நம்மைக் கொண்டு சென்று விடும். அப்படி அவர் நடித்த ஒரு சில படங்களைப் பார்ப்போம்.

1964ல் சர்வர் சுந்தரம் படத்தின் மூலமாக தமிழ்ப்பட உலகில் அறிமுகமானவர் கவுண்டமணி. இவரது படங்களில் சூரியன் மறக்கமுடியாதது. இந்தப் படத்தில் இவர் பேசும் நக்கலான வசனங்கள் ட்ரெண்டானவை. படத்தில் அவரோட பேரைக் கேட்டாலே நமக்கு சிரிப்பு வந்துவிடும். பன்னிக்குட்டி ராமசாமி. இதுதான் அவரோட பேரு.

இதையும் படிங்க… திருவிளையாடல் படத்தில் தருமி காட்சி எப்படி உருவானது தெரியுமா? சுவாரசிய பின்னணி..

ஒரு காட்சியில் மனோரமாவுடன் சரத்குமார் வருவார். அப்போது கவுண்டமணி கேட்பார். வாங்க செட்டியாரம்மா… என்ன இந்தப் பக்கம்? யார் இந்த மொட்டை? திருப்பதியா, பழனியா? என கேட்பார் கவுண்டமணி. அப்போது சரத்குமார் மொட்டைத் தலையுடன் இருப்பார். உடனே மனோரமா சாமிங்கன்னு சொல்வார்.

ஓ… பழனிசாமியான்னு டைமிங் காமெடி அடிப்பார் வடிவேலு. அடுத்ததாக ஓமக்குச்சி நரசிம்மன் வருவார். ஏ… பன்னிக்குட்டி ராமசாமி என அவரிடம் டீல் பேசுவார். அப்போது நான் ரொம்ப பிசின்னு சொல்வார் கவுண்டமணி. பசங்களா… நா வேணா… 2 ஆப்பம் போட்டுக் கொண்டு வரவான்னு கேட்பார் மனோரமா. பசி இல்ல பிசின்னு சொல்வார் கவுண்டமணி.

Nadigan

Nadigan

அதே போல நடிகன் படத்தில் சத்யராஜ் கவுண்டமணியிடம் நீ எப்போ வந்தேன்னு கேட்பார். அதற்கு கவுண்டமணி சத்யராஜை பார்த்து இப்படி சொல்வார். நீ கிழவனா வந்து குமரனா மாறி, திரும்பவும் கிழவனா மாறும்போதே நா வந்துட்டேன்னு சொல்வார். தொடர்ந்து நீ உங்க அம்மாவுக்காக பிராடுதனம் செஞ்சேங்கறதுக்காக உன்னை தங்கத்துல செஞ்ச ஜெயில்லயா போடுவாங்க. அதே ஜெயில் தான். அதே களி தான்.

இன்னொரு கட்டத்தில் யோவ்… என்னய்யா புளிசாதத்துல முட்டையை வச்சி பிரியாணின்னு சொல்லி ஏமாத்துறியான்னு கேட்டு, நான் பாட்டிம்மா கிட்டயே பிரியாணியை வாங்கிக்கறேன்..னு சொல்லி கலகலப்பூட்டுவார்.

அவரது படங்களைப் பொறுத்தவரை அவர் சொல்லும் வார்த்தைகள் அந்த டைமிங்கில் வருபவை என்பதால் அந்த நேரத்தில் கவனித்து சிரித்து விட வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தடுத்த காமெடிகள் தொடர்ந்து வந்துவிடும். நம்மால் கவனமாகப் பார்த்தால் தான் அத்தனை காமெடிகளையும் ரசித்து சிரிக்க முடியும். கவுண்டமணி வில்லனாக நடித்த படமும் உள்ளது. அது ரகசிய போலீஸ். பொன்னுரங்கம் என்ற கேரக்டரில் வந்து அசத்துவார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top