More
Categories: Cinema History Cinema News latest news

கவுண்டமணி ‘சுள்ளு’ன்னு சொன்னாருன்னா இவரு ‘சுளீர்’னுல சொல்றாரு… அது சரி நமக்கு ஏன் வம்பு?!

தமிழ்சினிமாவில் முற்போக்கான சிந்தனைவாதிகளாக சில நடிகர்கள் இருக்காங்க. அவர்களின் பேச்சு வெளிப்படையாகவே இருக்கும். யாருக்கும் பயப்பட மாட்டாங்க. மனதில் பட்டதை தைரியமாக பேசுவாங்க. இங்க ரெண்டு பேர் அப்படித்தான் பேசிருக்காங்க. என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாமா…

நடிகர் கவுண்டமணி தமிழ்த்திரை உலகில் ஒரு நகைச்சுவை ஜாம்பவான். இவரது படங்களில் இவர் செய்யும் நக்கலும், நய்யாண்டித்தனமும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடும். கவுண்டமணியைப் பொருத்தவரை ரசிகர், பேட்டி, நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டு பேசறதுன்னு எதுவுமே அவருக்கு பிடிக்காது. இதுபற்றி ஏன் என்று கேட்டால் அதற்கு அவர் சொல்ற பதில் இதுதான்….

Advertising
Advertising

நம்மளைப் பற்றிய நிஜ ரூபத்தைப் பொத்திப் பொத்தி வைக்கணும். பொட்டிக்கடையில பீடியைக் கட்டுக்கட்டா உள்ளே தான் வச்சிருப்பான். அதைக் கொண்டு போய் பரத்தி வச்சா வியாபாரம் இருக்காது. விழாக்கள், பேட்டி, கலைநிகழ்ச்சிகள்னு துபாய், சிங்கப்பூரு எல்லாம் போகமாட்டேன்.

MRR

ரசிகர் மன்றம் இருந்துச்சு. இப்போ கலைச்சுட்டேன். என் பிறந்த நாளே மறந்து போச்சு. முக்கியமா டிவிக்குப் பேட்டி கொடுக்கறதே இல்லை. கவுண்டமணியை சினிமாவுல மட்டும் போய் பாரு. அதான் கிக்… என்று ஒருதடவை சொல்லியிருக்கார்.

அதே நேரம் எம்.ஆர்.ராதா சொன்னது தான் ஹைலைட். படத்துல என்னைப் பாருங்க. சந்தோசப்பட்டுக்கிட்டுப் போங்க. கோவிலுக்குப் போங்க. சாமி கும்பிடுங்க. சாமியோட சேர்ந்து குடும்பம் நடத்தாதீங்க. எங்களைப் பார்த்தா நல்லாருக்குன்னு அபிப்ராயம் மட்டும் சொல்லுங்க. காலம் பூரா நினைச்சிக்கிட்டு இருக்காதீங்க. ஏன் ஒரு அறிவாளியைப் பத்தி நினைக்கலாமே…

இதையும் படிங்க… நல்லவனா இருந்தா மட்டும் போதாது…. வல்லவனாவும் இருக்கணும்… கண்ணதாசனின் எழுத்தில் எவ்வளவு அற்புதம்?!

இன்கம்டாக்ஸ்லயே பாக்கி வக்கிறவங்களும் நாங்க தான். நானே 13லட்சம் கட்டணும். உங்க பணத்தாலே முன்னேறினவங்க தான் சினிமாக்காரங்க. நீங்க தான் எங்களுக்கே தலைவர்கள். அதைவிட்டுட்டு எங்களைப் போயி தலைவருன்னு சொல்றீங்களே என சொல்லி இருக்கிறார்.

Published by
ராம் சுதன்

Recent Posts