Connect with us
goundamani

Cinema History

ரஜினியை விட அதிக சம்பளம் கேட்ட கவுண்டமணி….எந்த படத்துக்கு தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்டவர் கவுண்டமணி. 80களில் துவங்கி 2000 வரை பல திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். கவுண்டமணி – செந்தில் இருவரும் இருக்கிறார்கள் என்றாலே காமெடிக்கு கேரண்டி என ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள்..

goundamani

பல திரைப்படங்களில் இவர்களின் கூட்டணி கலைகட்டியது. செந்திலோடு மட்டுமல்ல. ஹீரோக்களோடு படம் முழுவதும் வலம் வரும் 2வது ஹீரோவாகவே கவுண்டமணி பல படங்களில் நடித்துள்ளார். ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்தியராஜ், விஜய், அஜித் என பல நடிகர்களுடன் படங்களில் கவுண்டமணி நடித்துள்ளார்.

ஆனால், ஒரு படத்தில் ரஜினியோடு நடிக்க ரஜினியை விட அவர் அதிக சம்பளம் கேட்டார் என்றால் நம்புவீர்களா?.. ஆனால் அது உண்மையிலே நடந்தது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி, விஜயசாந்தி, குஷ்பு உள்ளிட்ட பலரும் நடித்து 1992ம் ஆண்டு வெளியான திரைப்படம் மன்னன்.

mannan

இப்படத்தில் ரஜினியும், கவுண்டமணி ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளிகளாக நடித்திருப்பார்கள். இந்த படத்தில் அவர்கள் இருவரும் அடித்த லூட்டியை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்கள். குறிப்பாக சின்னத்தம்பி படம் பார்க்க அவர்கள் இருவரும் விஜயசாந்தியிடம் பொய் சொல்லிவிட்டு தியேட்டரில் அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி முதல் பரிசி தங்கி சங்கிலி விஜயசாந்தி கையிலேயே வாங்கும் நிலை ஏற்பட இருவரும் முழுக்கும் காட்சியில் தியேட்டரே சிரித்தது.

அதேபோல், ரஜினி தொழிலார்களுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம் செய்யும்போது சாப்பிட முடியாமல் கவுண்டமணி புலம்பும் காட்சிகளும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

goundamani

இந்த படம் உருவானபோது கவுண்டமணி மார்க்கெட்டின் பீக்கில் இருந்தார். இப்படத்திற்கு ரஜினியின் சம்பளம் ரூ.90 லட்சம். இப்படத்தில் நடிக்க கவுண்டமணியை அழைத்த போது தினமும் ஒரு லட்சம் சம்பளம் வாங்கி கொண்டிருந்தார். மேலும், ரஜினி சம்பளத்தோடு 10 லட்சம் சேர்த்து தனக்கு ஒரு கோடியாக தர வேண்டும் என கறார் காட்டினார் கவுண்டமணி. அதன்பின் ஒரு வழியாக ரூ.75 லட்சம் அவருக்கு சம்பளம் பேசி அவரை நடிக்க வைத்தனர்.

goundamani

அந்த உண்ணாவிரத காட்சியில் ‘நான் இங்க வந்து உக்காந்ததே தப்பு’ என்பார் கவுண்டமணி. இக்காட்சியில் ரஜினி சிரித்து விடுவார். 21 டேக்குகளுக்கு மேல் எடுக்கப்பட்டதாம் அக்காட்சி. ஆனாலும் ரஜினி தன் சிரிப்பை கை கொண்டு மூடித்தான் அக்காட்சி ஓக்கே ஆனது குறிப்பிடத்தக்கது.

ரஜினியுடன் மன்னன், எஜமான், உழைப்பாளி ஆகிய படங்களில் கவுண்டமணி நடித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top