கவுண்டமணிக்கு இப்படி ஒரு தம்பியா?!…பாசக்கார மனுஷன்தான்..விபரம் உள்ளே….

Published on: August 16, 2022
goundamani
---Advertisement---

நகைச்சுவையில் பஞ்ச் டயலாக் சொல்வதில் கைதேர்ந்தவர் நகைச்சுவை ஜாம்பவான் கவுண்டமணி. இவருடன் செந்திலும் சேர்ந்து விட்டால் திரையரங்கம் சிரிப்பலையில் அதிரும். அடிவாங்கியே நம்மை சிரிக்க வைப்பார் செந்தில்.

அடி கொடுத்தே நம்மை ரசிக்க வைப்பார் கவுண்டமணி. எதையும் சட்டென்று மனதுக்குள் வைக்காமல் வெளிப்படையாகப் பேசுபவர் கவுண்டமணி. இந்த குணத்தால் இவருக்கு நிறைய பிரச்சனைகளும் அவ்வப்போது வந்துள்ளன.

Singaravelan

ஒரு தடவை கமலைப் பார்த்து இவர் வெள்ளை செந்தில் வாராம்பா என்று சொல்லிவிட்டாராம். அன்று முதல் கமலும் இவரிடம் பேசவே இல்லையாம். இவரை தனது படங்களிலும் நடிக்க வைப்பதில்லையாம். அதன்பின்னர் இருவரும் பேசி சமாதானமானார்களாம்.

இருவரும் இணைந்து நடித்த சிங்காரவேலன் படத்தில் கூட அண்ணன் யாருன்னு தெரியுமாடான்னு கமலைப் பற்றி கேட்கையில், ஆமா…இவர் தெருத்தெருவா பசங்களக் கூட்டிட்டுப் போய் பிச்சை எடுக்க வைப்பாருன்னு சொல்லி சிரிப்பூட்டுவார்.

சத்யராஜ் உடன் இவர் ஜோடி சேர்ந்து விட்டால் இவர்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவே இருக்காது. அந்த அளவு காமெடியில் பிச்சி உதறுவார். ஆனால் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைத்த காமெடி கூட்டணி என்றால் கவுண்டமணி செந்தில் காமெடி தான்.

Goundamani

சும்மா அள்ளுது என்று சொல்லும் அளவிற்கு இன்றும் கூட இந்தக் காமெடிக்காட்சிகளை டிவியில் பார்த்தால் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் சித்தப்பா மகன் பெரியகருப்பன் நம்ம கவுண்டமணியைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…

Goundamani Thambi

நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது தான் எனக்கு வருத்தம். பணம் பத்தும் செய்யும் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் எம்எல்ஏ.வாக இருப்பார்.

கரகாட்டக்காரனில் நடித்த காமெடி என்னை ரசிக்க வைத்தது. அவரைத் தினமும் டிவியில் பார்த்து ரசிப்பேன். எங்க அண்ணன் நல்லா இருந்தா சரி தான்.

எங்க அப்பனை மதிக்கிற மாதிரி தான் நான் அவரை நினைப்பேன். அவரும் என்னை தப்பா பேசறதில்ல. நானும் அவரைத் தப்பா பேச மாட்டேன். எங்களை வான்னு தான் கூப்பிடுவாரு. ஆனால் அங்கு போனா நமக்கு பால் கறக்க முடியாது.

இது பாயுற மாடுன்னு சொல்லிடுவேன். மெட்ராஸ் பெரிய டவுன். அங்கபோயி நாம மாட்டிக்கிடக்கூடாது. அதனால அண்ணனுக்கும் செலவ இழுத்து விட்டுறக்கூடாது.

வெள்ளந்தியான இவர்கள் இன்னும் தன் அண்ணனின் மேல் தணியாத பாசம் கொண்டு இருப்பது நம்மை நெகிழச் செய்கிறது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.