Goundamani: தமிழ் சினிமா காமெடி நடிகர்களிலேயே அதிகம் கவரப்பட்டவர் கவுண்டமணி. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அடுத்தவர்களை அவர் செய்யும் கேலி முக சுழிப்பை ஏற்படுத்தவே படுத்தாது. அந்த வகையில் கவுண்டரின் சினிமா வளர்ச்சிக்கு காரணம் ஒரு நடிகர் தானாம்.
சர்வர் சுந்தரம் படத்தில் கண்ணுக்கே தெரியாத ரோலில் சினிமாவில் கால் வைத்தவர் கவுண்டமணி. அடுத்து பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தின் மூலம் அறிமுகமானார். நல்ல வலுவான கதாபாத்திரம். ரஜினிக்கு அடியாளாக நடிப்பில் அசத்தி இருப்பார்.
இதையும் வாசிங்க:சிவாஜியே ”ப்ளாக் கோப்ரா” என அழைத்த அந்த நடிகர்..? வில்லனுக்கே பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்…
இந்த படம் முடிந்த பின்னர் பாரதிராஜா இயக்கிய படம் கிழக்கே போகும் ரயில். அந்த படத்தில் கவுண்டமணியை போடவே வேண்டாம் என பாரதிராஜா ஒற்றைக்காலில் நின்று இருக்கிறார். அதற்கு அவரின் மொட்டை தலையை காரணமாக கூறினாராம்.
ஆனால் அதற்கு நடிகரும், பாரதிராஜாவின் உதவி இயக்குனருமான பாக்கியராஜ் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அவர் நடிக்கிறார்ல. அவர் தான் இந்த படத்துல ராதிகாவின் மச்சான் என அடம்பிடித்து இருக்கிறார். கேரக்டர் செலக்ஷனில் பாக்கியராஜ் கெட்டி என்பதால் பாரதிராஜாவும் சரி சொல்லிவிட்டார்.
ஒரு துணை கதாபாத்திரத்திற்கு பாக்கியராஜ் ஏன் இத்தனை மெனக்கெட்டார் என்றால் அதற்கு காரணம் ஒன்று இருந்ததாம். எல்டாம்ஸ் ரோட்டில் இருந்த ஒரு மேன்ஷனில் கவுண்டமணி, சங்கிலி முருகன், கல்லாப்பெட்டி சிங்காரம், செந்தில், பாக்யராஜ் ஆகியோர் ஒன்றாக தான் தங்கி இருந்தனராம்.
இதில் பாக்யராஜை தவிர மற்ற அனைவருமே நாடக நடிகர்கள். பின்னாளில் சினிமாவில் பாக்யராஜ் உயர உயர தன்னுடைய நண்பர்களுக்கு வாய்ப்பு கொடுத்து கொண்டே வந்தாராம். அதை தொடர்ந்து பாரதிராஜாவின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாவில் கமலின் குமாஸ்தாவாக கவுண்டமணி நடித்திருப்பார்.
இதையும் வாசிங்க:ரசிகர்களை ஏமாற்றிய தங்கலான்!… மீண்டும் படையெடுக்கும் விக்ரம்… காரணம் இதுதானாம்!…
இதற்கும் பாக்கியராஜ் தான் காரணமாம். இதன்பிறகு பாரதிராஜாவின் நான்காவது படைப்பான புதிய வார்ப்புகள் படத்தில் பாக்யராஜ் ஹீரோவாக நடித்தார். அப்போ சொல்லவா வேண்டும். கவுண்டமணிக்கு முக்கிய ரோலை வாங்கி கொடுத்தார்.
அதன்பிறகு பாக்யராஜ் இயக்கிய முதல் படமான சுவரில்லாத சித்திரங்களில் வரும் காளியண்ணன் கேரக்டர் இன்னும் உயர்த்தியது. தனியாக நடித்து தனக்கென அடையாளத்தினை உருவாக்கிய பின்னரே செந்திலுடன் கூட்டு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…