பந்தா பண்ணிய சத்யராஜ்ஜை பங்கமாய் கவுண்ட்டர் அடித்து ஆஃப் செய்த கவுண்டமணி… வேற லெவல் காமெடி…
கவுண்டமணி-செந்தில் காம்போ எந்த அளவுக்கு ரசிக்கப்பட்டதோ அதற்கு சற்றும் குறைவில்லாத காம்போதான் சத்யராஜ்-கவுண்டமணி காம்போ. “மாமன் மகள்”, “நடிகன்”, “தாய் மாமன்”, “பிரம்மா” போன்ற பல திரைப்படங்களில் சத்யராஜ்ஜும் கவுண்டமணியும் இணைந்து காமெடியில் கலக்கியிருப்பார்கள்.
திரைப்படத்தில் மட்டுமல்லாது படப்பிடிப்புத் தளத்திலும் கூட கவுண்டமணி யாரையாவது கவுண்ட்டர் அடித்துக்கொண்டே இருப்பாராம். அவ்வாறு கவுண்டமணி சத்யராஜ்ஜுக்கு ஒரு முறை பங்கமாய் கவுண்ட்டர் கொடுத்த ஒரு நகைச்சுவை சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
கடந்த 2000 ஆம் ஆண்டு சீமான் இயக்கத்தில் சத்யராஜ், குஷ்பு, கவுண்டமணி, செந்தில் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “வீரநடை”. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு நாள் சத்யராஜ்ஜிடம் ஓரு இயக்குனர் அன்று மாலை கதை கூற வருவதாக கூறியிருக்கிறார். ஆதலால் சத்யராஜ் இயக்குனர் சீமானிடம் “தம்பி, கொஞ்சம் இன்னைக்கு சீக்கிரம் விட்டுடு. சாயங்காலம் என்னைய பாக்குறதுக்கு ஒரு டைரக்டர் வராரு. கதை கேட்கனும்” என பந்தாவாக கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: படம் ஃப்ளாப் ஆனதால் காசை திருப்பிக்கொடுத்த விஜயகாந்த்… என்ன மனிஷன்யா!!
அதனை அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்த கவுண்டமணி “எப்படி இருந்தாலும் அந்த கதையை நீங்க வேண்டாம்ன்னு சொல்லப்போறது இல்லை. ஏன்னா நம்ம கண்ணுக்கு எட்டுன தூரத்துக்கு எந்த டைரக்டரும் கதை சொல்ல வரலை. இந்த ஒரு டைரக்டர்தான் வரான்.
நீங்க எப்படியும் அந்த டைரக்டர் ஓடிப்போயிடுவான்னு சொல்லி கதவை பூட்டி வச்சிட்டுத்தான் அந்த டைரக்டர்கிட்ட கதை கேட்கப்போறீங்க. ஏன்னா அவன் எழுந்திருச்சி போயிட்டானா வேற படமே கிடையாது. அதனால எதுக்கு இவ்வளவு பில்ட் அப்” என்று கூறி சத்யராஜ்ஜை பங்கமாய் கலாய்த்திருக்கிறார். இதனை கேட்ட சத்யராஜ் உட்பட பலரும் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.