நாய் நல்லா நடிச்சிருக்கு சத்யராஜ்!.. கவுண்டமணி கொடுத்த சரியான கவுண்டர்!.. சிரிச்சு சிரிச்சு வயிறே வலிச்சிருச்சு!..
தமிழ் சினிமாவில் கவுண்டருக்கு பேர் போனவர் நடிகர் கவுண்டமணி. டைரக்டர் சொல்லும் வசனங்களை விட சொந்த டையலாக்கை வைத்தே சக நடிகர்களை பாடாய்படுத்துவார் கவுண்டமணி. அதனாலேயே பல ஹீரோக்கள் கவுண்டமணி நடிக்கும் படம் என்றால் கொஞ்சம் தயங்குவார்களாம்.
ஏன் ரஜினி கூட பாபா படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் டேக்கிற்கு முன்னாடி வந்து கவுண்டமணியிடம் ‘தயவு செய்து ஏதாவது சொல்லி மானத்தை வாங்கிறாதீங்க கவுண்டமணி’ என்று சொல்லிவிட்டு போவாராம். அந்த அளவுக்கு பாரபட்சமில்லாமல் அனைத்து நடிகர்களையும் கிண்டல் செய்யக் கூடியவர் கவுண்டமணி.
ஆனால் நடிகர் சத்யராஜ் மட்டுமே கவுண்டமணிக்கு சரியான ஜோடியாக வலம் வந்தார். இருவரும் சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றனர். இவர்கள் நடித்த படங்களில் நகைச்சுவை தான் ஹைலைட். அந்த அளவுக்கு லொள்ளு, நையாண்டி, நக்கல் நிறைந்த நடிகர்களாகவே சத்யராஜும் கவுண்டமணியும் வலம் வந்தார்கள்.
இவர்களுடன் நடிகர் மணிவண்ணனும் சேர்ந்தால் அவ்ளோதான். அப்படி இந்த மூவருக்கும் இருக்கும் ஒற்றுமை மூன்று பேருமே கோயம்புத்தூரை சேர்ந்தவர்கள். மேலும் படப்பிடிப்பில் சத்யராஜும் கவுண்டமணியும் மற்ற நடிகர்களையும் கலாய்ப்பார்களாம்.
இந்த வகையில் கவுண்டமணி சத்யராஜிடமே அவர் வேலையை காட்டியிருக்கிறார். சத்யராஜின் மகன் சிபிராஜ் நடித்த படமான ‘ நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை கவுண்டமணி பார்த்தாராம். பார்த்து விட்டு சத்யராஜுக்கு போன் செய்து சொன்னாராம். அதற்கு படம் எப்படி இருக்குனு சத்யராஜ் கேட்டாராம்.
அதற்கு கவுண்டமணி ‘ நாய் நல்லா நடிச்சிருக்கு சத்யராச், உன் மகன விட நாய் நல்லா நடிச்சிருக்குப்பா’ என்று அவர் பாணியில் சொன்னாராம். இந்த தகவலை நடிகர் மீசை ராஜேந்திரன் கூறும் போது அவரால் அடக்கமுடியாத சிரிப்போடு கூறினார். அதுமட்டுமில்லாமல் இந்த நாய்கள் ஜாக்கிரதை படம் சத்யராஜின் சொந்த புரடக்ஷனில் தயாரான படம். இதை கவுண்டமணியிடம் சொன்ன போது ‘ஏன் சத்யராச் காசு இல்லையா? உன் மகன வச்சி படம் எடுக்குற’ என்று சத்யராஜை கலாய்த்தாராம்.
இதையும் படிங்க : முகமெல்லாம் பளபளப்பு!.. கரகாட்டக்காரனில் ராமராஜனின் மேக்கப்பிற்கு பின்னனியில் இருக்கும் சுவாரஸ்யமான சம்பவம்..