கவுண்டமணி தினமும் தொட்டு கும்பிடும் புகைப்படம்… ஆனால் சாமி ஃபோட்டோ கிடையாது!…

Published on: May 3, 2023
Goundamani
---Advertisement---

தமிழ் சினிமாவின் நகைச்சுவை புயலாகவும் கவுண்ட்டர் மன்னனாகவும் வலம் வந்தவர் கவுண்டமணி. இவரது நக்கல் கலந்த நகைச்சுவை வசனங்கள் இப்போதும் மீம் டெம்ப்ளேட்டாக இணையத்தில் பயன்படுத்தப்படுகிறது. அந்தளவுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டத்தை வலைத்துப்போட்டவர் கவுண்டமணி.

1980, 90 களில் கவுண்டமணி-செந்தில் ஆகியோரின் காம்போதான் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்ட காம்போவாக இருந்தது. பல திரைப்படங்கள் கவுண்டமணி-செந்தில் காமெடிகளுக்காகவே ஓடின.

கவுண்டமணி எப்போதும் பழமையான வழக்கங்களை கேலி செய்பவர். அவரது நகைச்சுவைகளிலேயே இந்த தன்மையை பார்க்கலாம். உதாரணத்திற்கு ஒரு திரைப்படத்தில், “தமிழன் என்ன கண்டுபிடிச்சான். கம்ப்யூட்டர் கண்டுபிடிச்சானா? இல்லை கரண்ட்ட கண்டுபிடிச்சானா? பழைய சோத்தையும் ஊறுகாயையும் தின்னுட்டு கல் தோன்றா மண் தோன்றான்னு பேச கண்டுபிடிச்சான்” என்று போகிற போக்கில் கலாய்த்திருப்பார். இவ்வாறுதான் அவரது நகைச்சுவைகளில் பல இடங்களில் இது போன்ற கருத்துக்களை நாம் பார்க்கலாம்.

இந்த நிலையில் காமெடி நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் கவுண்டமணி குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது கவுண்டமணி தனது வீட்டில் தாமஸ் ஆல்வா எடிசனின் புகைப்படத்தையும் அதற்கு அருகில் பெருமாள் புகைப்படத்தையும் வைத்திருப்பாராம்.

எப்போதும் முதலில் தாமஸ் ஆல்வா எடிசனின் புகைப்படத்தை தொட்டு கும்பிட்டுவிட்டு அதன் பிறகுதான் பெருமாளின் புகைப்படத்தை தொட்டு கும்பிடுவாராம். தாமஸ் ஆல்வா எடிசன் சினிமாவை கண்டுபிடித்ததால் முதலில் அவரது புகைப்படத்தை தொட்டுக் கும்பிட்டுவிட்டு, அதன் பிறகுதான் பணம் கொட்டிக்கொடுக்கும் பெருமாள் புகைப்படத்தை தொட்டுக்கும்பிடுவாராம் கவுண்டமணி.

இதையும் படிங்க: பல நடிகர்கள் காதல் தூண்டில் போட்டும் சிக்காத சரோஜா தேவி.. இதெற்கெல்லாம் காரணம் அவர்தானாம்!..

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.