சிவாஜிக்கு பிறகு அந்த விஷயத்தில் சரித்திரம் படைத்த கவுண்டமணி!.. இது தெரியாம போச்சே!..
தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன் எப்பேற்பட்ட ஆளுமையாக இருந்தார் என அனைவருக்கும் தெரியும். அவர் செய்யாத சாதனை இல்லை, அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரம் இல்லை. எல்லா வித கதாபாத்திரத்திலும் அப்படியே வாழக்கூடியவர் தான் சிவாஜி கணேசன்.
சிவாஜி ஓர் மாபெரும் நடிகர்
ஹீரோவாக குணச்சித்திர நடிகராக என அனைத்திலும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார். நடிப்பிற்கே இலக்கணமாக வாழ்ந்தவர்தான் சிவாஜி கணேசன். புராணக்கதைகள், சரித்திரக்கதைகள், வரலாற்றுக் கதைகள், குடும்ப கதைகள் என தன் உற்சாகமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்.
கிட்டத்தட்ட மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமைக்குரியவர் சிவாஜி கணேசன். பராசக்தியில் தன் பயணத்தை ஆரம்பித்த சிவாஜி படையப்பா படத்தின் மூலம் முடித்துக் கொண்டார்.சிவாஜியின் பெரும்பாலான படங்கள் ‘ப’ வரிசையிலேயே அமைந்திருக்கும்.
இது யாருக்கும் வாய்க்காது
அந்த வகையில் அவரின் முதல் படமும் கடைசி படமும் கூட ப விலேயே அமைந்திருப்பது சிறப்புக்குரியது. இந்த நிலையில் பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் சிவாஜியையும் கவுண்டமணியையும் ஒப்பிட்டு ஒரு தகவலை கூறினார்.
அதாவது படத்திற்கு படம் விக் வைத்து நடிப்பதில் சிவாஜிக்கு பிறகு நடித்த ஒரே நடிகர் கவுண்டமணிதானாம். அதாவது ஒரு படத்தில் பயன்படுத்திய விக்கை மற்றொரு படத்தில் பயன்படுத்தமாட்டாராம் கவுண்டமணி. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான விக்கைத்தான் பயன்படுத்துவாராம்.
இதற்கு முன்னதாக சிவாஜி மட்டும் தான் அப்படி செய்து வந்தாராம். அவரை அடுத்து அந்த விஷயத்தில் கவுண்டமணிக்குத்தான் அந்த பேர் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க : வடிவேலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கவுண்டமணி… விஜயகாந்த் செய்த துணிகர காரியம்… என்ன நடந்தது தெரியுமா?