வடிவேலு சினிமாவிற்குள் வருவதற்கு காரணமாக இருந்தது ராஜ்கிரண்தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது. ராஜ்கிரண் ஒரு முறை தனது ரசிகரின் திருமணத்திற்காக மதுரைக்கு சென்றபோது, அங்கே வடிவேலுவை சந்திக்க நேர்ந்தது. வடிவேலுவின் நகைச்சுவையான பேச்சு அவருக்கு பிடித்துப்போக, அதன் பின் வடிவேலுவை சில வருடங்கள் கழித்து தனது “என் ராசாவின் மனசிலே” திரைப்படத்தில் நடிக்க வைத்தார். “என் ராசாவின் மனசிலே” திரைப்படத்தில் வடிவேலு நடித்த முதல் காட்சியே கவுண்டமணியிடம் மிதி வாங்கும் காட்சிதான்.
இந்த நிலையில் பிரபல காமெடி நடிகரான சிஸ்ஸர் மனோகர், சமீபத்தில் ஒரு யூட்யூப் சேன்னலுக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார். அப்பேட்டியில் அத்திரைப்படத்தில் வடிவேலு நடித்தது குறித்தான ஒரு முக்கிய தகவலை கூறியுள்ளார்.
சிஸ்ஸர் மனோகர் அக்காலகட்டத்தில் ராஜ்கிரண் கம்பெனியில் புரொடக்சன் உதவியாளராக வேலை செய்துகொண்டிருந்தாராம். அவரோடு வடிவேலுவும் வேலை பார்த்துக்கொண்டிருந்தாராம்.
“என் ராசாவின் மனசிலே” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு கிராமத்தில் நடந்துகொண்டிருந்தபோது சிஸ்ஸர் மனோகரை தேனீர் வாங்கி வரச்சொல்லியிருக்கிறார் இயக்குனர். அவர் சென்று தேநீர் வாங்கி வந்தபோது வடிவேலுவை வைத்து ஒரு காட்சி படமாக்கப்பட்டுக்கொண்டிருந்ததாம்.
அப்போது கவுண்டமணி, செந்திலிடம், “என்ன செந்திலு, நம்மல தவிர வேற யாராவது காமெடி நடிகன் வந்திருக்காங்களாடா?” என்று கேட்டாராம். அப்போது பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சிஸ்ஸர் மனோகர், “அண்ணே, இது நம்ம பையன்தான். மதுரையில் இருந்து வந்திருக்கான். இந்த சீனுக்கு அப்புறம் நீங்க அவனை மிதிக்கிற மாதிரி ஒரு சீன் இருக்கு” என கூறியிருக்கிறார்.
உடனே கவுண்டமணி, “எங்கே அந்த ராஜ்கிரணை கூப்புடு. அவனவன் தேனாம்பேட்டைல சினிமா வாய்ப்பு கிடைக்காம ரோட்டுல நின்னிட்டு இருக்கான். இவர் மதுரைல இருந்து கொண்டு வந்து நடிக்க வைப்பாரோ” என கத்தினாராம்.
அதன் பின் ராஜ்கிரண் அங்கே வர, அவர் கவுண்டமணியிடம், “அண்ணே, இவன் நம்ம கிட்டதான் வேலை பாக்குறான். இந்த ஒரு சீன்தான். அடுத்து உங்ககிட்ட அடி வாங்குன சீன் முடிஞ்சதும் நான் மதுரைக்கு அனுப்பி வச்சிடுறேன்” என கூறியிருக்கிறார். “சரி, அந்த ஒரு சீன்தான், அடுத்து மதுரைக்கு அனுப்பிடனும் அவன” என கூறினாராம் கவுண்டமணி.
அதன் பின் வடிவேலு, கவுண்டமணியிடம் மிதி வாங்குவது போன்ற காட்சியில், கவுண்டமணி, நிஜமாகவே வடிவேலுவை நெஞ்சில் மிதித்தாராம். அந்த காட்சி முடிந்ததும் வடிவேலு சிஸ்ஸர் மனோகரிடம், “அண்ணே, நெஜமாவே நெஞ்சுலயே மிதிச்சிட்டாருண்ணே” என கூறியிருக்கிறார். அதற்கு சிஸ்ஸர் மனோகர், “கவலைப்படாத, நீ பெரிய ஆளா ஆகிடுவ” என கூறினாராம். எனினும் பின்னாளில் தனக்கும் வடிவேலுவுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் கூறுகிறார் சிஸ்ஸர் மனோகர்.
இதையும் படிங்க: மோகனுக்கு டப்பிங் கொடுத்தது இந்த டாப் நடிகரின் நெருங்கிய உறவினரா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…