More
Categories: Cinema History Cinema News latest news

நாய் சூப்பரா நடிச்சிருக்குப்பா!.. சிபிராஜை பங்கமாக கலாய்த்த கவுண்டமணி!..

நடிகர் கவுண்டமணி என்றாலே நக்கலுக்கும், நையாண்டிக்கும் கொஞ்சமும் குறைவிருக்காது. திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் அவர் அப்படித்தான். அவரிடம் யார் என்ன சொன்னாலும் அதற்கு ஒரு கவுண்ட்டர் கொடுப்பார். நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என ஒருவரும் இவரிடமிருந்து தப்பமுடியாது. சகட்டுமேனிக்கு அனைவரையும் கிண்டலடிப்பார். அதனால்தான் ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள் இவருடன் அதிக திரைப்படங்களில் நடிக்கவே மாட்டார்கள். குறிப்பாக கமலுக்கு கவுண்டமணி பேசும் விதம் பிடிக்கவே பிடிக்காது. எனவே, அவருடன் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

Goundamani Senthil

நாடகங்களில் நடித்து அப்படியே சினிமாவுக்கு வந்தவர் கவுண்டமணி. கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து ஒரு கட்டத்தில் கதாநாயகனாக கூட சில படங்களில் நடித்தார். மேலும், முன்னணி காமெடி நடிகராகவும் மாறினார். சத்தியராஜ், பிரபு, கார்த்திக், ராமராஜன் படங்கள் என்றால் இவர் கண்டிப்பாக இருப்பார். காட்சி எடுக்கும்போது கேப் கிடைத்தால் அவர்களையும் கலாய்த்துவிடுவார். இதை திரைப்படங்களில் நாம் பார்க்க முடியும்.

Advertising
Advertising

கவுண்டமணிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த நடிகர் சத்தியராஜ். இருவரும் கோவையை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரின் காம்பினேஷனில் வந்த படங்கள் என்றால் சிரிப்பு சரவெடி நிச்சயம். சத்தியராஜின் மகன் சிபிராஜும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு நடிகரானவர். ஆனால், பல படங்களில் நடித்தும் அவரால் முன்னணி நடிகராக மாறமுடியவில்லை.

சிபிராஜ் நடிப்பில் உருவான திரைப்படம் நாய்கள் ஜாக்கிரதை. இப்படத்தை சத்தியராஜே மகனுக்காக தயாரித்தார். இப்படத்தின் பூஜை நடந்ததை பார்த்த கவுண்டமணி சத்தியராஜுக்கு போன் செய்து ‘என்னப்பா கையில செலவுக்கு பணம் இல்லயா?.. பையன எல்லாம் நடிக்க வைக்குற?’ என்றாராம். அதேபோல் அந்த படத்தை பார்த்த கவுண்டமணி படம் முடிந்ததும் ‘ஏப்பா அந்த நாய் உன் பையன விட சூப்பரா நடிச்சிருக்குப்பா’ என சொன்னாராம் கவுண்டமணி.

Published by
சிவா

Recent Posts