எல்லோர் முன்னிலையிலும் பங்கமாக கலாய்த்த கவுண்டமணி...கடுப்பான கமல்ஹாசன்.....

கவுண்டமணி என்றாலே நக்கல்தான். பெரிய ஹீரோ சின்ன ஹீரோ என யாராக இருந்தாலும் டக்கென்று கலாய்த்து விடுவார். அவர் கொடுக்கும் கவுண்ட்டருக்கு தமிழ் சினிமா ரசிகர்களே அடிமையாகி கிடந்தனர். திரையில் இவர் தோன்றினாலே ரசிகர்கள் குபீர் என சிரித்து விடுவார்கள். இவரின் காமெடிக்காக பல படங்கள் வெற்றியை பெற்றது.
இவரும், செந்திலும் இருக்கிறார்கள் என்று தெரிந்தாலே அப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் இருந்தனர். 80களில் இருந்து 20 வருடங்கள் கவுண்டமணியின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்தியராஜ், கார்த்திக், சரத்குமார் என அப்போதைய ஹீரோக்களுடன் இணைந்து காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்தார் கவுண்டமணி. சில சமயங்களில் பெரிய ஹீரோக்களையே பங்கமாக கலாய்த்து விடுவார்.
இப்படித்தான் ஷங்கர் இயக்கிய இந்தியன் படத்தின் படப்பிடிப்பின் போது கமலும், கவுண்டமணியும் நடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சிலர் ‘என்ன நீங்கள் மட்டும் தனியாக நடிக்கிறீர்கள்? செந்தில் எங்கே?’ என கவுண்டமணியிடம் கேட்க, அதற்கு அவர் ‘இதோ நிக்குறாரே வெள்ளை செந்தில்’ என எல்லோர் முன்னிலையிலும் கமலை கை காட்டியுள்ளார். இது கமலுக்கு அவமானமாகிப் போனது. எனவே, ‘கவுண்டமணி இப்படி பேசுகிறாரே’ என வருத்தப்பட்டுள்ளார் கமல்.
சிலர் கவுண்டமணியிடம் சென்று ‘நீங்கள் இப்படி பேசியிருக்க கூடாது...கமல் வருத்தப்படுகிறார். அவரிடம் மன்னிப்பு கேட்டு விடுங்கள்’எனக்கூற, மீண்டும் கவுண்டமணி சத்தமாக எல்லோர் முன்னிலையிலும் ‘கமல் சார் உங்களை வெள்ளை செந்தில் என சொன்னதற்கு மன்னித்து விடுங்கள்’ என உரக்க சொன்னாராம். அதாவது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் ஒரு முறை கமலை அவர் கலாய்த்துவிட்டாராம்...
எனவேதான், கவுண்டமணியை கமலுக்கு பிடிக்கவே பிடிக்காது. அவருடன் ஓரிரு படங்களில் மட்டுமே கமல் நடித்தது குறிப்பிடத்தக்கது.