தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தனது காமெடி காட்சிகளில் மூலம் ரசிகர்களை ரசிக்க வைத்தவர் கவுண்டமணி. துவக்கத்தில் நாடகங்களில் நடித்து அப்படியே சினிமாவுக்கு வந்தவர். பல படங்களில் தனி டிராக் என சொல்லப்படும் கதைக்கு சம்பந்தமில்லமால் இவரும், நடிகர் செந்திலும் காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்கள். ஒருகட்டத்தில் முன்னணி காமெடி நடிகரான கவுண்டமணி ஹீரோக்களுடன் இணைந்து காமெடி செய்தார். பல படங்களில் இரண்டாவது கதாநாயகனாகவே நடித்தார்.
ரஜினி, சத்தியராஜ், கார்த்திக், பிரபு, சரத்குமார் உள்ளிட பல கதாநாயகர்களின் படங்களில் கதாநாயகர்களின் நண்பனாகவே நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். நடிகர் கவுண்டமணி திரையில் மட்டுமல்ல படப்பிடிப்பில் தன்னுடன் நடிக்கும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோரையும் சகட்டுமேனிக்கு கலாய்ப்பார்.
படப்பிடிப்பில் அப்படி நடந்த பல சம்பவங்களை நடிகர் சத்தியராஜ் பல சினிமா விழாக்களில் பகிர்ந்துகொண்டுள்ளார். ஒருவிழாவில் சத்தியராஜ் பேசும்போது ‘ஒரு சமயம் என் கையில் படங்களே இல்லை. சீமான் இயக்கிய வீரநடை என்கிற ஒரு படத்தில்தான் நடித்துகொண்டிருந்தேன். அந்த படத்தில் கவுண்டமணியும் என்னுடன் நடித்தார். ஒரு இயக்குனர் என்னிடம் கதை சொல்ல அன்று மாலை என் வீட்டிற்கு வருவதாக சொல்லியிருந்தார். எனவே, நான் இயக்குனரிடம் ‘என்னை சீக்கிரம் விட்ருங்கப்பா. ஒருத்தர் கதை சொல்ல வறாரு’ என திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தேன்.
அதற்கு கவுண்டமணி ‘எப்படியும் அந்த கதையை நீ வேணாம்னு சொல்லமாட்ட.. ஏன்னா கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் ஒருத்தனும் வரல.. கதவ சாத்தி வச்சிட்டுதான் அவன்கிட்ட நீ கதையையே கேட்ப. ஏன்னா அவனும் ஓடிட்டான்னா வேற எவனும் இல்ல. அப்படி இருக்கும்போது எதுக்கு இந்த பில்டப்பு’ என கலாய்க்க நானே குலுங்கி குலுங்கி சிரித்துவிட்டேன்’ என பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
உலகம் முழுவதும்…
VijayTV: விஜய்…
GV Prakash:…
Kubera: துள்ளுவதோ…
Vijayashanthi: தெலுங்கில்…