கவுண்டமணி வீட்டில் இருக்கும் நாயின் பெயர் என்ன தெரியுமா? சொன்ன ஆச்சரியப்படுவீங்க
தமிழ் சினிமாவில் காமெடியில் கோலோச்சி வந்தவர் நடிகர் கவுண்டமணி. இவருடைய நக்கலுக்கும் நையாண்டிக்கும் இணையாக இன்று வரை யாரும் பிறக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தனக்கே உரிய பாணியில் அனைவரையும் சிரிக்க வைத்த மகிழ்வித்தவர் கவுண்டமணி. கூடவே நடிகர் செந்திலின் காம்போதான் படத்திற்கு ஹைலைட்டே.
அரசியல் கருத்துக்களை சர்வ சாதாரணமாக தன் நகைச்சுவை மூலம் சரமாரியாக தாக்கி கிண்டலடித்தவர். மேலும் கூட நடிக்கும் சக நடிகர்களிடமும் மிகவும் நெருக்கமாக பழகக் கூடியவர். சொல்லப்போனால் ரஜினியே கவுண்டமணியிடம் எதாவது சொல்லி என் மானத்தை வாங்கிராதீங்க என்று சொல்லுவாராம்.
அந்த அளவுக்கு யாருக்கும் பயப்படாமல் எதையும் ஓப்பனாக பேசக்கூடியவர். இந்த நிலையில் கவுண்டமணியின் ஹூயுமர் சென்சை பிரபல இயக்குனர் ராம்தாஸ் ஒரு பேட்டியில் கூறினார். ராம் தாஸ் அவருடைய திருமணத்திற்காக அழைப்பிதழை வைக்க கவுண்டமணியின் வீட்டிற்கு சென்றாராம்.
போய் உட்கார்ந்ததும் அவர் அருகிலேயே கவுண்டமணி வளர்க்கும் நாயும் உட்கார்ந்ததாம். உடனே ராம்தாஸ் கவுண்டமணியிடம் ‘ நாயை பார்த்து இதோட பேர் என்ன சார் ’ என்று கேட்டாராம். அதற்கு கவுண்டமணி ‘இது பேர் நாய்தான், வேறென்ன பேர் வைக்க? அதுக்கு பேர் வச்சுக்கிட்டு அதையும் நாம நியாபகம் வச்சுக்கிட்டு, அது எதுக்கு ராம்தாஸு’ என்று அவருடைய பாணியிலேயே சொல்லி கிண்டலடித்தாராம்.
இதை சொல்லி ராம்தாஸ் மேடையில் வயிறு குலுங்க சிரிக்க மேடையில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர். மேலும் கவுண்டமணி கவுண்டமணிதான் என்றும் அவருடைய பெருமையை சொல்லி பேசினார்.
இதையும் படிங்க : நானும் ஹீரோயின்தானே? ‘அவன் இவன்’ படத்துல பாலாவால் ஏமாந்ததுதான் மிச்சம்.. ஜனனி ஓப்பன் டாக்