கவுண்டமணி அப்பேற்பட்ட ஆளுதான்! விசித்ரா சொன்னதையும் தாண்டி அதெல்லாம் நடந்திருக்கு.. போட்டுடைத்த பிரபலம்
Actor Goundamani: தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் பல ஆண்டுகளாக கோலோச்சி வந்த நடிகர் கவுண்டமணி. நக்கலான கவுண்டர்கள் மூலம் எதார்த்தமாக வாழ்க்கையில் நடக்கக் கூடிய விஷயங்களை காமெடியாக சொல்லி சிரிக்க வைத்தவர்.அரசியலில் நடக்கும் விஷயங்களையும் போகிற போக்கில் காமெடியாக சொல்லிவிட்டு சிரிக்க வைப்பவர். இவர் இருக்கிற வரைக்கும் நகைச்சுவையில் இவர்தான் கிங்.
கூடவே செந்திலின் காமெடியும் படத்திற்கு ப்ளஸாக அமைந்தது. ஒரு இரட்டையர்கள் போலவே இருவரும் நகைச்சுவையில் கலக்கி வந்தார்கள். யாரைப் பற்றியும் கருத்தில் கொள்ளாமல் அவர் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர் கவுண்டமணி. அதனாலேயே பல முன்னனி நடிகர்கள் இவருடன் நடிக்க தயங்கினார்கள்.
இதையும் படிங்க: ஜெயலலிதா குடும்பத்தினை போல முரளி குடும்பத்தினை தொடரும் பிரச்னை… என்ன நடந்தது?
ரஜினி கூட கவுண்டமணியுடன் நடிக்கும் போது ‘கவுண்டரை பார்த்து போடுங்க’ என்று சொல்வாராம். ஏனெனில் ஸ்கிரிப்ட்டில் உள்ளதை பெரும்பாலும் பேசமாட்டார் கவுண்டமணி. ஸ்பாட்டில் என்ன தோன்றுகிறதோ அதைத்தான் பேசுவார். அதனாலேயே ரஜினி முன் கூட்டியே சொல்லி விடுவாராம்.
சினிமாவை மட்டுமே கடவுளாக பார்த்து வந்த கவுண்டமணி பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. அதிலும் பயில்வான் ரெங்கநாதன் கூறிய சில விஷயங்களை கேட்கும் போது உண்மையிலேயே கவுண்டமணி அப்படிப்பட்டவரா என்று யோசிக்க வைத்தது. இந்த நிலையில் விசித்ரா ஒரு சமயம் கவுண்டமணியை பார்த்து வணக்கம் சொல்லவில்லையாம். அதனால் கவுண்டமணி கோபித்துக் கொண்டார் என்பது மாதிரியான தகவலை கூறியிருந்தார்.
இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமா உலகில் அறிமுகப்படுத்திய 30 இயக்குனர்கள்!.. அட எல்லாமே ஹிட்டு!..
இதை பற்றி வலைப்பேச்சு அந்தனன் ‘ஒரு வணக்கம் சொல்லாததற்கு மட்டும் கவுண்டமணி கோபித்தார் என்றால் உண்மையிலேயே ஆச்சரியப்பட வேண்டும்’ என்று கூறினார். ஏனெனில் விசித்ரா சொன்னதில் இன்னும் நிறைய இருக்கு. கவுண்டமணியை பற்றி எனக்கு ஏகப்பட்ட விஷயங்கள் தெரியும். விசித்ரா ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுத்து மட்டுமே சொல்லியிருக்கிறார்.ஆனால் உண்மையிலேயே கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான் என அந்தனன் கூறினார்.