80 காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை ஜாம்பவான்களாகக் கவுண்டமணி, செந்தில் இரட்டையர்கள் கொடிகட்டிப் பறந்தனர்.
இவர்களது படங்களைப் பாரக்கும்போது நாம் கண்டிப்பாக விழுந்து விழுந்து தான் சிரிப்போம். அந்த அளவு காமெடியில் ஒரு யதார்த்தம் கலந்து இருக்கும். குறிப்பாக கவுண்டமணியிடம் செந்தில் அடி வாங்கியே சிரிக்க வைப்பார். ஏடாகூடமாகக் கேள்வி கேட்பது தான் இவரது தலையாய பணியாக இருக்கும்.
அதே போல திட்டுவதில் கில்லாடி கவுண்டமணி. மடச்சாம்பிராணி, ஏன்டா எருமை வாயா, பன்னித்தலையா, அண்டா வாயா, அடுப்புல வெந்தவனேன்னு தனக்கே உரித்தான காமெடி பஞ்சுடன் இவர் சக நடிகர்களைத் திட்டி அதிலும் குறிப்பாக செந்திலைத் திட்டும்போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட இரட்டையர்களில் ஒருவரான செந்தில் தன் சினிமா உலக அனுபவங்களில் சிலவற்றை எப்படி சொல்கிறார் என்று பார்ப்போமா…
எம்ஜிஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா, சந்திரபாபு, சுருளிராஜன், நாகேஷ் என பழம்பெரும் நடிகர்களை எல்லாம் பார்த்து தான் சினிமாவுக்கு வந்துருக்கேன். இவங்களுக்கு எல்லாம் முன்னோடி குறிப்பா என்.எஸ்.கே.
எங்களுக்கு காமெடி எழுதுறவர் ஏ.வீரப்பன். கதைக்குத் தேவையான காமெடியத் தான் அவரு எழுதுவாரு. நாங்க ஸ்பாட்ல சொல்லுவோம். கவுண்டமணி, கல்லாப்பெட்டி சிங்காரம் எல்லாரும் பொள்ளாச்சி போறதுக்காக ட்ரெய்ன்ல ஏறிப் போனோம்.
கொஞ்சம் அசந்து தூங்கிட்டோம். அப்புறம் பார்த்தா பாலக்கோடு பக்கம் போய்க்கிட்டு இருக்கே. நான் கவுண்டமணி அண்ணன்கிட்ட கேட்டேன்…ஏண்ணே கேரளா எழுத்துலாம் போட்டுருக்கேன்னு கேட்டேன்.
என்னது கேரளா எழுத்தா…ஆமாண்ணே பாலக்கோடுலாம் போட்ருக்குன்னு சொன்னதும் அங்கேருந்து எறங்கி ஸ்டேஷனுக்குப் போகாம பின்னாடி வந்து டிக்கெட் கேட்பானோன்னு பயந்து டாக்சி புடிச்சி திரும்ப பொள்ளாச்சி சூட்டிங் வந்தோம்.
எங்கள எழுப்பி விடுறேன்னு சொன்ன கல்லாப்பெட்டி சிங்காரம் நல்லா தூங்கிட்டு இருக்காரு. இதெல்லாம் நடந்துருக்கு. இதே மாதிரி ஏகப்பட்ட காமெடி நடந்துருக்கு.
கோபிச்செட்டிப்பாளையத்துக்குப் போய்க்கிட்டு இருந்தோம். முன்னாடி எமரால்டு லாட்ஜ் இருந்தது. அதைத் தாண்டி போய்க்கிட்டு இருந்தான் டிரைவர். என்னப்பா…லாட்ஜ் அங்கருக்குன்னு சொன்னேன்.
அண்ணேன் பிரேக் புடிக்கலண்ணேன். அடப்பாவி பிரேக் புடிக்கலேன்னு நீ பாட்டுக்கு ஓட்டிட்டுப் போற…எதாவது சாவி கீவி எடுய்யான்னு சொன்ன உடனே ஏதோ ஒரு இடத்துல மோதி அப்படித் தான் நின்னான்.
இன்னும் ஏராளமான ரசிகர்கள் இருக்காங்க. அதைத் தொல்லைன்னு சொல்ல முடியாது. அன்புன்னு வச்சிக்கிடணும். அப்போ செல்பின்னு ஒண்ணு வந்துச்சு.
பூரோம் என் தோள்பட்டையை அமுக்கி இப்படின்னுது. பிறகு இப்படி…அப்புடின்னு…சரி என்ன செய்ய…நீங்க கொடுத்த காசுதானேன்னு…சொல்லி எடுங்கன்னு சொல்லிட்டேன். எடுத்தாச்சா…சரி வரட்டுமான்னு தப்பிச்சி ஓடிப்போயிடுவேன்.
Maharaja movie:…
Sivakarthikeyan: தமிழ்…
Prabhudeva: சினிமாவின்…
ரஜினியின் இயற்பெயர்…
அமீர், சூர்யா,…