எதுக்குயா அரசியலுக்கு வர்றீங்க! – கார்த்திக்கை பார்த்து கலாய்த்துவிட்ட கவுண்டமணி!

Published on: March 4, 2023
---Advertisement---

நவரச நாயகன் கார்த்திக்கும் கவுண்டமணியும் பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். இருவருமே நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

மேட்டுக்குடி, உனக்காக எல்லாம் உனக்கான, உள்ளத்தை அள்ளித்தா போன்றவை இவர்கள் கூட்டணியில் மிகவும் பிரபலமான திரைப்படங்கள். திரைப்படங்களில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் கூட நகைச்சுவை திறன் அதிகம் கொண்டவர் கவுண்டமணி.

ஒருவர் செய்யும் விஷயம் அவருக்கு நகைச்சுவையாக தெரிந்துவிட்டால் உடனே அதை கிண்டல் செய்துவிடுவார். இந்த பழக்கத்தால் சினிமா துறையில் சில சமயங்களில் சிக்கல்களையும் இவர் அனுபவித்துள்ளார். நடிகராக இருக்கும் அதே சமயம் அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்தார் கார்த்திக்.

2006 ஆம் ஆண்டு அவர் ஃபார்வர்டு ப்ளாக் என்னும் கட்சியில் சேர்ந்தார். அதற்கு பிறகு 2009 ஆம் ஆண்டு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்கிற கட்சியை உருவாக்கினார். அந்த கட்சிக்கு நடிகர் கார்த்திக் தலைவராக இருந்தார்.

இந்த விஷயம் கவுண்டமணிக்கு தெரிந்துள்ளது. சும்மாவே அரசியல்வாதிகளை அதிகமாக கிண்டல் செய்யக்கூடியவர் கவுண்டமணி. இதில் தன் நண்பனே அரசியல்வாதி ஆகியிருக்கும்போது சும்மா இருப்பாரா? கட்சி துவங்கியவுடன் கவுண்டமணியை சந்திக்க வந்தார் கார்த்தி. கார்த்தியை மேலும் கீழும் பார்த்தார் கவுண்டமணி.

இவர் எப்படியும் தன்னை கிண்டல் செய்வார் என்பதை அறிந்தே கார்த்திக் அவர் முன் வந்திருந்தார். கார்த்திக்கை பார்த்த கவுண்டமணி “ஏன்யா? ஏன்? எதுக்குய்யா அரசியலுக்கு வர்றீங்க? என பட பாணியிலேயே கேட்டுள்ளார். இப்படியாக கூட பழகியவர்களை கூட கலாய்த்துவிடுபவர் கவுண்டமணி என ஒரு பேட்டியில் கார்த்திக் கூறியுள்ளார்.

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.