“சீக்கிரம் ஷூட்டிங்க முடிங்க”… பந்தா காட்டிய சத்யராஜ்ஜை பங்கமாய் கலாய்த்த கவுண்டமணி…

by Arun Prasad |
Sathyaraj and Goundamani
X

Sathyaraj and Goundamani

தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்து வந்த கவுண்டமனி, தனது கவுண்ட்டர் வசனங்களால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கவுண்டமணி-செந்தில் ஆகியோர் இணைந்து 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளனர். கவுண்டமணி-செந்தில் காம்போ காலம் கடந்த பேசப்பட்டு வரும் காம்போவாக நிலைத்து நிற்குறது.

இந்த நிலையில் ஒரு படப்பிடிப்பின்போது சத்யராஜ்ஜை கவுண்டமணி பங்கமாய் கலாய்த்த ஒரு சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

Sathyaraj and Goundamani

Sathyaraj and Goundamani

கவுண்டமணியும் சத்யராஜ்ஜும் இணைந்து பல திரைப்படங்களில் கலக்கியிருக்கிறார்கள். அவ்வாறு ஒரு திரைப்படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது உதவி இயக்குனரை அழைத்த சத்யராஜ் “இன்னும் எத்தனை நாள் இந்த பாடல் காட்சியை படமாக்கப்போகிறீர்கள்?” என கேட்டாராம். அதற்கு அந்த உதவி இயக்குனர் “இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் சார்” என கூறியபோது “இயக்குனர் கிட்ட சொல்லி நாளைக்குள் இந்த பாடல் காட்சியை முடித்துவிடச்சொல்” என சத்யாராஜ் கூறினாராம்.

“சரி” என்று தலையாட்டிய உதவி இயக்குனர், சத்யராஜ் கூறிய விஷயத்தை இயக்குனரிடம் கூறப் போனாராம். அந்த உதவி இயக்குனரை தடுத்து நிறுத்திய கவுண்டமணி “தம்பி, இவர் சொன்னார்ல. அந்த விஷயத்தை எதுவும் இயக்குனரிடம் சொல்லாதே” என கூறி அனுப்பி விட்டாராம்.

இதையும் படிங்க: “உங்க படம் பார்த்தா கொல்லனும் போல தோணுது”… ரஜினியை நேரிலேயே வம்புக்கு இழுத்த ராதா ரவி…

Sathyaraj and Goundamani

Sathyaraj and Goundamani

அதன் பின் சத்யராஜ்ஜிடம் “இந்த பாடல் காட்சியை இரண்டு நாட்களில் முடித்துவிட்டு என்ன பண்ணப்போற? நீ நடிக்கிறதுக்கு எதுவும் படம் இருக்கா? உனக்கும் படம் இல்லை, எனக்கும் படம் இல்லை. வீட்டுலேயே உட்கார்ந்திருக்குறதுக்கு இங்க ஷூட்டிங் வந்தா கொஞ்சம் மகிழ்ச்சியாவாவது இருக்கலாம்ல. அத விட்டுட்டு அவசர அவசரமா முடிச்சிட்டு என்ன பண்ணப்போற?” என நக்கலாக கேட்டாராம் கவுண்டமணி. இவ்வாறு கவுண்டமணி கூறியவுடன் விழுந்து விழுந்து சிரித்தாராம் சத்யராஜ்.

Next Story