நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்!.. திரையுலகினர் இரங்கல்!…

by சிவா |   ( Updated:2025-05-05 02:22:47  )
Goundamani
X

Goundamani

நாடகங்களில் நடித்து வந்த கவுண்டமணி 70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க வந்தார். பாக்கியராஜின் உதவியால் பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில் போன்ற படங்களில் வாய்ப்பு கிடைக்க அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார். அதன்பின் பல படங்களிலும் நகைச்சுவை நடிகராக நடித்தார். 80களில் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

90களில் முன்னணி காமெடி நடிகராக இருந்த கவுண்டமணி, செந்திலையும் தன்னுடன் சேர்த்துகொண்டு பல படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார் கவுண்டமணி - செந்தில் இருந்தாலே படம் ஹிட் என்கிற நிலைமையும் உருவானது. தனி டிராக் காமெடி செய்து வந்த கவுண்டமணி ஒரு கட்டத்தில் இரண்டாவது ஹீரோ போல மாறினார்.

பிரபு, கார்த்திக், சத்தியராஜ், சரத்குமார் போன்ற நடிகர்களின் படங்கள் ஓடுவதற்கு முக்கிய காரணமாக கவுண்டமணி இருந்தார். கோலிவுட்டில் ஒருநாளைக்கு இவ்வளவு லட்சம் என சம்பளம் வாங்கிய முதல் நகைச்சுவை நடிகர் இவர்தான். கடந்த பல வருடங்களாகவே கவுண்டமணி சினிமாவில் நடிக்கவில்லை.

வயது மூப்பு காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு ஒத்த ஓட்டு முத்தையா என்கிற படம் வெளியானது. ஆனால், அந்த படம் ஓடவில்லை. கவுண்டமணி எந்த ஊடகங்களுக்கும் பேட்டி கொடுப்பது இல்லை. தனது குடும்பம் பற்றி எங்கேயும் அவர் பேசியது இல்லை. அவர்களின் புகைப்படங்கள் கூட அதிகம் வெளியானது இல்லை.

#image_title

இந்நிலையில்தான், கவுண்டமணியின் மனைவி சாந்தி(67) உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் உடல் தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் இறுதிச் சடங்களுக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, திரையுலகினரை சேர்ந்தவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Next Story