இறுக்கி பிடித்த கெளதம் மேனன்.! உதறி சென்ற ஹாரிஸ் ஜெயராஜ்.! பின்னணி எனன,?
மின்னலே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்கள் ஏராளம் அதில் அப்படத்தின் ஆணி வேர்களான இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இருவரும் முக்கியமான அறிமுகங்கள். இந்த இரு பெரும் கலைஞர்களும் தற்போது வரை ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் தான்.
ஆனால், எனோ சில காரணங்களால், வாரணம் ஆயிரம் எனும் சூப்பர் ஹிட் எவெர்க்ரீன் ஹிட் கொடுத்துவிட்டு சிறிது கேப் விட்டு என்னை அறிந்தால் படத்தில் மட்டும் ஹாரிஷை வைத்து படம் இயக்கினார் கௌதம் மேனன். இதனிடையே விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா என வேறுவேறு இசையமைப்பாளர்களை நாடினார் கெளதம் மேனன்.
இதையும் படியுங்களேன் – ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் இங்க தான் இருக்காங்களா.?! ரஜினி, கமல், போனி கபூர்…
இதன் பின்னணி என்னவென்று விசாரிக்கையில், இருவருக்கும் ஈகோ பிரச்சனை தான் என்கின்றனர் சிலர். அதாவது நாம் அறிமுக படுத்தியவர் தானே என்று தானே தயாரித்து இயக்கும் படங்களில் ஹாரிஸிற்கு சம்பளம் குறைவாக கொடுத்ததாகவும், அதனால், ஹாரிஸ் வருத்தப்பட்டதாகவும்,
அதே போல நாம் தானே முதல் படத்தில் இருந்தே அவர் படத்திற்க்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளோம் நமக்கு ஏன் சம்பளம் குறைவாக கொடுக்கிறார்கள் என அவரும் நினைத்ததால் தான் மீண்டும் இந்த கூட்டணி தொடராமல் போனதற்கு கரணம் என்கின்றனர் .
எது எப்படியோ ஆனால் இந்த பிரச்சனைகளால் நஷ்டமடைந்தது தமிழ் சினிமா ரசிகர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர் கூட்டணி இல்லாமல், ஏதேதோ வரிகளுடன் பாடல்கள் வெளியாகி இதுதான் ட்ரெண்ட் என நல்ல தமிழை மறக்கடித்து வருகிறார்கள்.