அந்த ஹீரோவுடன் இணையும் கவுதம் மேனன்.... சக்கர பொங்கலுக்கு வடகறியா?...
ஸ்டைலீஸ் இயக்குனர் என பெயரெடுத்தவர் கவுதம் மேனன். அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா என எல்லாமே மாஸான ஸ்டைலீஸ் படங்கள்தான்.
தற்போது சிம்புவை வைத்து ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். ஐசரி கணேஷ் நிறுவனத்தின் வேல்ஸ் இண்டர்நேஷன்ல் நிறுவனத்திற்கு 3 திரைப்படங்கள் தொடர்ச்சியாக இயக்கி கொடுக்க கவுதம் மேனன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
எனவே, வெந்து தணிந்தது காடு படத்திற்கு பின் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க கவுதம் மேனன் திட்டமிட்டிருந்தார். ஆனால், நிறைய படங்களை கையில் வைத்திருப்பதால் கால்ஷீட் கொடுக்க முடியாது என மறுத்துவிட்டார் சிவகார்த்திகேயன்.
எனவே, அந்த கதையில் ராகவா லாரன்ஸை நடிக்க வைக்கலாம் என தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ராகவா லாரன்ஸ் பக்கா லோக்கலாக படம் எடுப்பவர். அவர் நடிக்கும் படங்களில் அவரின் கதாபாத்திரமும் அவருக்கு ஏற்றவாறுதான் இருக்கும். அவர் எப்படி ஸ்டைலாக படம் எடுக்கும் கவுதம் மேனன் படத்தில் நடிப்பார் என இப்போதே ஆச்சர்யம் எழுந்துள்ளது.
இதை கேள்விப்பட்டு சிலர் ‘சக்கர பொங்கலுக்கு வடகறியா?’ என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.