ஜனநாயகன் திரைப்படம் ஏற்கனவே சென்சாரில் சிக்கி திட்டமிட்டபடி ஜனவரி 9ம் தேதி வெளிவராமல் போனது. அதோடு தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் சுமார் ஒரு மாத காலம் இந்த படம் முடங்கி போனது. தற்போது ஒருவழியாக இந்த வழக்கை வாபஸ் பெற்றிருக்கிறார் தயாரிப்பாளர். எனவே படம் மறுத்தணிக்கையில் இருக்கிறது. அதேநேரம் அதிகாரிகள் எப்போது படம் பார்த்து மறுத்தணிக்கை செய்து படத்திற்கு எப்போது சான்றிதழ் கொடுப்பார்கள் என்பது தெரியவில்லை..
எல்லாம் சரியாக நடந்தால் இந்த மாத இறுதிக்குள் ஜனநாயகன் படம் வெளியாகும் என தெரிகிறது. அப்படி இல்லையென்றால் தேர்தலுக்கு பின்னரே இப்படம் வெளியாகும் என்கிறார்கள். ஒருபக்கம் சமீபத்தில் தவெக நிர்வாகி அருண்ராஜிடம் சில செய்தியாளர்கள் ‘விஜய் அவரின் படங்கள் வெளியாகும் போது அதிக விலைக்கு டிக்கெட் விற்பதையே தடுப்பதில்லை.. அவர் எப்படி ஊழலை ஒழிப்பார்?’ எனக் கேட்க அவரோ ‘அதை தடுக்க வேண்டியது அரசின் வேலைதான்’ என்று சொல்லிவிட்டார்..
இதை அரசு சீரியஸாக எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. எனவே ஜனநாயகன் படம் வெளியாகும் போது தியேட்டர்களில் அரசு நிர்ணயத்த விலையை விட அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டால் தியேட்டருக்கு சீல் வையுங்கள் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம்.
