செந்தில் கவுண்டமணியிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கக்கூடாது
![செந்தில் கவுண்டமணியிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கக்கூடாது செந்தில் கவுண்டமணியிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கக்கூடாது](http://cinereporters.com/wp-content/uploads/2022/02/gowndamani-senthil.jpg)
gowndamani senthil
கவுண்டமணி-செந்தில்
இந்த ஜோடியை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. தமிழ்சினிமாவில் காமெடி இரட்டையர்கள் என்று இவர்களைச் சொல்லலாம். ரசிகர்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் அடிவாங்குகிறார்.
மற்றொருவர் திட்டுகிறார். பல படங்களில் செந்தில் அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு கவுண்டமணியிடம் எக்குத்தப்பாக கேள்விகள் கேட்டு உதை வாங்குவது கவுண்டமணியும் ஏ...நாற வாயா...மாங்கொட்டை மண்டையா என ஏக வசனங்கள் பேசி ரகளை பண்ணுவார். அப்படி அவர் பேசும் பல டயாலாக்குகள் ட்ரெண்ட்டாகி விடும். இன்று வரை மறக்க முடியாத இவர்களது காமெடி கலாட்டாக்களில் சில உங்கள் பார்வைக்கு..
கரகாட்டக்காரன்
![](https://cinereporters.com/wp-content/uploads/2022/02/karakattakaran-2.jpg)
karakattakaran
இந்தப்படத்தின் பெயரைக் கேட்டாலே நம் நினைவுக்கு வருவது வாழைப்பழ காமெடி தான். கவுண்டமணி செந்திலிடம் 2 வாழைப்பழங்கள் வாங்கச் சொல்வதும், செந்தில் ஒன்றை சாப்பிட்டு விட்டு மற்றொன்றைக் கொடுப்பதும் கவுண்டமணி ஒண்ணு இந்தாருக்கு...இன்னொன்ன எங்கே என செந்திலிடம் கேட்டதும், அதுதான்ன இது என அசால்டாக பேசி கவுண்டமணியை டென்ஷன் ஆக்குவதும் படத்தைப் பார்க்கும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.
அதன்பிறகு மெதுவாகவும், கோபமாகவும், பொறுமையாகவும் பலமுறை கவுண்டமணி செந்திலிடம் இதே கேள்வியைக் கேட்டுப்பார்த்தும் அவருக்கு எவ்விதத்திலும் பிரயோஜனமான பதில் கிடைக்கவில்லை. அதுதான இது என்ற பதிலையே செந்தில் திரும்ப திரும்ப சொல்லி கடுப்பேத்துவார். இந்த கட்டப்பஞ்சாயத்தைத் தீர்க்க கோவை சரளா குழுவினரும் வந்து மேலும் சிரிக்க வைத்து விடுவர்.
நாட்டாமை
இந்தப்படத்தில் டேய் தகப்பா என்று செந்திலைப் பார்த்து கவுண்டமணி பேசும் வசனம் சக்கை போடு போட்டது. மீனுக்கு வலை போட்டா வலைக்குள்ள என்ன இருக்கும்? மீன் இருக்கும். மானுக்கு வலை போட்டா வலைக்குள்ள என்ன இருக்கும். மான் இருக்கும். கொசுவுக்கு வலை போட்டா வலைக்குள்ள என்ன இருக்கும்? என வாத்தியாரிடம் செந்தில் கேள்வி கேட்க வாத்தியார் முழிப்பார்.
அப்போது கவுண்டமணி அங்கு வருவார். டேய் தகப்பா நான் கேட்குற கேள்விக்கு நீ பதில் சொல்றா. நாய்க்கு வலை போட்டா வலைக்குள்ள என்ன இருக்கும்? நாய் இருக்கும். நாய் இருக்காது. நீ இருப்ப என கவுண்டமணி சொன்னதும் செந்தில் வாயைப் பிளந்தபடி அருகில் இருந்த பெண்ணின் தோளில் கையைப் போடுவார். தாய்க்குலத்து மேல கையை வைக்காத என கவுண்டமணி கம்பால் செந்திலை அடிக்க வருவார். அப்போது மை சன் மை சன் என்றபடி அலறியடித்து ஓடுவார் செந்தில்.
சின்னக்கவுண்டர்
சின்னக்கவுண்டர் படத்தில் கழுதையிடம் கவுண்டமணி பேசிக்கொண்டு இருப்பார். அப்போது செந்தில் கவுண்டமணியிடம் கேள்வி கேட்பார்.
தண்ணி எங்க இருந்து வருதுங்கற கேள்விகள் கேட்டு கேட்டு கவுண்டமணியும் பதில் சொல்வார். கடைசியில் மழை பெய்து பள்ளத்தில் விழும் தண்ணீர் கடலுக்கு போகுது என்பார். உடனே ஆற்றில் துணி வெளுத்துக் கொண்டிருக்கும் செந்தில் இரு கைகளால் இந்தத் தண்ணீர் குடிச்சுப் பாருங்க. இது மட்டும் ஏன் இனிப்பா இருக்கு.
கடல் தண்ணீர் உப்புக்கரிக்கு என கேள்விக் கேட்பார். தண்ணிய அள்ளி தீர்த்தமா மாதிரி கொடுத்துக்கிட்டு அலும்பாடா பண்ற என கவுண்டமணி கேட்பார். தொடர்ந்து விடாமல் பதில் சொல்லிட்டு போங்கண்ணே என செந்தில் கையைப் பிடித்துக் கேட்பார். அதற்கு பதில் சொல்ல முடியாதுடா என்பார்.
தொடர்ந்து விடாமல் கேட்க காலால் எட்டி உதைப்பார் கவுண்டமணி. செந்தில் ஆற்றில் போய் விழுவார். இந்த ஆறு கடலுக்குத் தான் போகுது. அங்க ஒங்க அப்பன் நண்டு வறுத்துத் தின்னுக்கிட்டு இருப்பான். அவன்கிட்ட போய் கேளு. பதில் சொல்வான் என்பார் கவுண்டமணி.
ஜெய்ஹிந்;த்
![](https://cinereporters.com/wp-content/uploads/2022/02/jaihind.jpg)
jaihind
செந்தில் டிரிபிள்ஸ்ல பைக் ஓட்டி வருவார்.கவுண்டமணி போலீஸாக வந்து அவர்களை மடக்குவார். வந்தது ராங்கு இதில வேற சாங்கா...இறங்குங்கடா...என கவுண்டமணி சத்தம் போடுவார். என்னடா டிரிபிள்ஸ்ல வர்ரீங்க. நாங்க டிரிபிள்ஸ் ல வருவோம். போர்ஸ்ல வருவோம். பைவ்ஸ்ல வருவோம்.
அதைக் கேட்க நீங்க யாரு? ட்ரஸ்ஸ பார்த்தா தெரில. நான் யாரா உன்ன மாதிரி புறம்போக்குகளைப் பிடிக்கத் தான்டா முச்சந்தியில நிக்கறேன் என்பார். அப்போது செந்திலின் வித்தியாசமான சிகை அலங்காரத்தைப் பார்த்து கவுண்டமணி அதென்ன தலை மேல கீறிப்புள்ள படுத்துருக்கு என்பார். இது ஸ்டைல் என்று சொல்வார்.
ஸ்டைலா என கையை தலையில் வைத்து தேய்த்துப் பார்ப்பார். ஆ...பரதேசி நாய...எண்ணை கிண்ணை தேய்க்கக்கூடாது...கையைக் கிழிச்சிடுச்சிடா என்பார். இவன் வெந்தவன். இவன் வேகாதவன்..இவன் அரைவேக்காடு...ஏன்டா லைசென்ஸ் கிய்சென்ஸ் வச்சிருக்கியா...அது எங்க பரம்பரைக்கே கிடையாது...சரி மாமூல்ல குடுத்துட்டு கௌம்பு என்பார். நாங்க குடுத்து பழக்கமில்ல. வாங்கித்தான் பழக்கம் என ஸ்டைலாகச் சொல்வார் செந்தில். வாங்கித்தான் பழக்கமா என கேட்கும் கவுண்டமணி லத்தியால் நாலு தட்டு தட்டு 3 பேரையும் ஜெயிலில் கொண்டு போய் போடுவார்.