இன்னொரு ‘கோப்ரா’ ஆகுமா ‘வெந்து தணிந்தது காடு’...ஃபிளாப் பாத்தும் திருந்தலையா கவுதம் மேனன்?!...
திரையுலகில் சில இயக்குனர்கள் இருப்பார்கள். அவர்களை தயாரிப்பாளர்களின் இயக்குனர்கள் என சொல்வார்கள். என்ன பட்ஜெட் சொன்னார்களோ அதை விட குறைவாக படத்தை முடிப்பார்கள்.
அதேபோல், கூறிய நாட்களை விட குறைவான நாட்களில் படத்தை முடித்து கொடுப்பார்கள். இதனால், தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாது. கே.எஸ்.ரவிக்குமார், ஹரி, சுந்தர் சி மற்றும் லோகேஷ் கனகராஜ் என பல இயக்குனர்கள் அந்த பட்டியலில் இருக்கிறார்கள்.
ஒருபக்கம், இதற்கு நேர்மாறான இயக்குனர்களும் இருப்பார்கள். கூறிய பட்ஜெட்டை விட பல கோடிகள் அதிகரித்து படத்தை முடிப்பார்கள். தயாரிப்பாளர்களை பற்றியெல்லாம் கவலையே படமாட்டார்கள். தான் நினைத்தை எடுக்க வேண்டும் என்பதில் மட்டுமே உறுதியாக இருப்பார்கள். ஆனால், படம் ஓடவில்லை எனில் தயாரிப்பாளர் தலையில் துண்டுதான். சமீபத்தில் வெளியான கோப்ரா இதற்கு மிகப்பெரிய உதாரணம் ஆகும். இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார்.
இதையும் படிங்க: அண்ணாத்த-யில் பட்ட பாடு!…ஜெயிலரில் உஷார் ஆன ரஜினி…லீக் ஆன தகவல்….
பொதுவாக பட ரீலீஸுக்கு சில நாட்களுக்கு முன்பு முழுப்படத்தை தயாரிப்பாளர்களுக்கு இயக்குனர்கள் திரையிட்டு காட்டுவார்கள். அதில், ஏதேனும் குறை இருந்தால் தயாரிப்பாளர் தெரிவிப்பார். அதை இயக்குனரும் செய்வார்.
ஆனால், கோப்ரா படத்தை ரிலீஸ் ஆதவற்கு முதல்நாள் இரவுதான் திரையிட்டு காட்டினார் அஜய் ஞானமுத்து. படத்தின் நீளத்தை தயாரிப்பாளர் குறைக்க சொல்லியும் அஜய் ஞானமுத்து கேட்கவில்லை. படம் ரீலீஸ் ஆனபின் படத்தின் நீளம் பெரும் குறையாக இருந்தது. அதன்பின் 25 நிமிடம் படத்தை வெட்டினார். ஆனால், அதற்குள் நெகட்டிவ் விமர்சனங்கள் அப்படத்தை காலி செய்துவிட்டது.
தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கும் அதே நிலை ஏற்படுமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இப்படம் வருகிற 15ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தை இன்னும் தயாரிப்பாளருக்கு இப்படத்தின் இயக்குனர் கவுதம் மேனன் போட்டுக்காட்டவில்லையாம். மேலும், சென்சாருக்கும் இன்னும் இப்படம் அனுப்பப்படவில்லை. வெந்து தணிந்தது காடு படம் என்ன ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.