அவர யாருன்னே தெரியாது!...கடுப்பான கௌதம் மேனன்...அசிங்கப்பட்ட ரஞ்சித்....
சமீபகாலமாக சினிமா தொடர்பான அறிவிப்புகள், அப்டேட்டுகள், ஃபர்ஸ்ட்லுக் , டீசர் மற்றும் டிரெய்லர் ஆகியவை டிவிட்டர் மூலமே வெளியிடப்பட்டு வருகிறது. திரையுலகில் பிரபலமானவர்கள் 90 சதவீதம் பேர் டிவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். மேலும், தங்களின் படங்களை விளம்பரப்படுத்த பிரபலபங்களின் டிவிட்டர் கணக்கையும் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
நட்பு அடிப்படையிலும், சரி நம்மால் அவர்களுக்கு ஒரு விளம்பரம்தானே என்கிற நல்லெண்ணத்திலும் பிரபலங்களும் வளரும் நடிகர்கள், அறிமுக நாயகர்கள் மற்றும் புது படங்கள் தொடர்பான செய்திகளை தங்களின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். ஆனால், சில சமயம் அதுவே அவர்களுக்கு சிக்கலாகவும் முடிந்துவிடுகிறது.
காலா, கபாலி, சார்பேட்டா பரம்பரை ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘அன்பு செல்வன்’ என்கிற படத்தின் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து கூறியிருந்தார். அந்த போஸ்டரில் இயக்குனர் பெயர் வினோத் குமார் என இருந்தது. அந்த போஸ்டரில் கௌதம் மேனன் போலீஸாக நடிப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தது. எனவே, கௌதம் மேனன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் போல என பலரும் நினைத்தனர்.
ஆனால், இதுபற்றி டிவிட்டரில் விளக்கமளித்துள்ள கௌதம் மேனன் ‘இது எனக்கு அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது. நான் நடிக்கவிருக்கும் இந்தப் படம் எது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த போஸ்டரில் பெயர் இடம் பெற்றிருக்கும் இயக்குனரை எனக்குத் தெரியாது அல்லது சந்திக்கவில்லை. இதை செய்ய தயாரிப்பாளருக்கு பெரிய நபர்கள் கிடைத்துள்ளனர். இது போன்ற ஒன்றை மிக எளிதாக செய்ய முடியும் என்பது அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து, ரஞ்சித் அந்த டிவிட்டை டெலிட் செய்துவிட்டார். ஆனாலும், சிலர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து இதை பகிர்ந்து வருகின்றனர்.
COPYRIGHT 2024
Powered By Blinkcms