இது என்ன புதுசா இருக்கு?! பொங்கலுக்கு - வடகறி காம்பினேஷன்.! GVM அடுத்த பட ஹீரோ.?!
கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் என்றாலே மெல்லிய ஒரு படகு பயணம் போல மெதுவாக இருக்கும். ஆக்சன் காட்சிகள் கூட கவிதை போல வடிவமைத்து இருப்பார். ஆனால், சமீப காலமாக அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதனால், கடன் சுமை அதிகரித்ததால் நடிக்க கிளம்பிவிட்டார். அதிலும், தனது முத்திரையை பலமாக பதித்துவிட்டார். தற்போது கடன் சுமை கொஞ்சம் குறைந்துள்ளதால் அடுத்தடுத்து தனது இயக்கத்தில் காத்திருக்கும் திரைப்பட வேலைகளை பார்த்து வருகிறார்.
இவருக்கு அப்படியே எதிர்மாறானவர் ராகவா லாரன்ஸ். இவரது படங்கள் பக்கா கமர்சியல் அம்சம் கொண்டதாக இருக்கும். நீண்ட வருடமாக தன்னுடைய உடம்புக்குள் பேய்க்கு அடைக்கலம் கொடுத்து படம் எடுத்து வருகிறார். அதற்கான ரிசல்ட்டை காஞ்சனா படங்களின் பேய் வெற்றி நமக்கு கூறிவிடும்.
தற்போது சினிமாவின் இந்த இரு வேறு துருவங்களும் ஒன்றாக இணைந்து ஒரு படத்தை எடுக்க உள்ளனர். கெளதம் மேனன் இயக்க, லாரன்ஸ் நடிக்க உள்ளாராம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.