
Cinema News
இவருக்கு வந்த வாழ்வை பாருங்க.., பாரதிராஜா, சத்யராஜ் இவர்களுடன் நடிக்கும் ஜி.பி.முத்து.!
டிக் டாக் உலகில் மிகவும் பிரபலமாகி பின்னர் டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகு தனக்கென தனி யூடியூப் சேனல் ஆரம்பித்து, அதிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஜி.பி.முத்து.
தனது யூ-டியூப் சேனல் மூலம் தனக்கு வரும் கடிதங்களை அவர் ஜாலியாக பிரித்து படிக்கும் விதம் ரசிகர்களை மிகவும் ஈர்த்தது. மேலும், அவர் சில தவறான கடிதங்களை படிக்கும்போது அவர் அந்த கடிதங்களை அனுப்பி வைத்தவர்களை திட்டுவதும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.
அதன் பின்னர் சில ஆல்பம் வீடியோ பாடல்களில் தலை காட்டியுள்ளார் ஜி.பி.முத்து. தற்போது இவர் பாரதிராஜாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். இந்த செய்தி பலரை ஆச்சர்யமாக்கியுள்ள்ளது, அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆம், சுசீந்திரன் தற்போது விஜய் ஆண்டனியை நாயகனாக வைத்து ‘வள்ளி மயில்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் பாரதிராஜா, சத்யராஜ், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதில் ஜி.பி.முத்துவும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறாராம்.
இதையும் படியுங்களேன் – ரத்த கசிவு., மேல் சிகிச்சைக்காக வெளிநாடு கூட்டி செல்கிறோம்.! – அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்திய சிம்பு.!
மேலும், அவருக்கென தனி கேரவன் ஒதுக்கப்பட்டு உள்ளதாம். ஷூட்டிங் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் ஜி.பி.முத்து, பாரதிராஜா, சத்யராஜ் என மூத்த நடிகர்களுடன் ஒன்றாக சேர்ந்து கலகலப்பாக சிரித்து பேசி மகிழ்ந்து வருகிறாராம்.
சாதாரணமாக டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு, அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வந்த ஜி.பி.முத்து, தற்போது இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் சத்யராஜுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இவரின் வளர்ச்சி பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.