அட பிக்பாஸ் வீட்டுக்கே இனி பேப்பர் ஐடியா?..இவர் வந்தா செமயா களை கட்டுமே!...
விஜய் டீவியில் வெளிவந்து பெரும் வெற்றி அடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. வழக்கம்போல் இந்த சீசனையும் நடிகர் கமல்தான் தொகுத்து வழங்க உள்ளார்.
இதையடுத்து சீசன் 6 ல் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில் தற்போது தயாரிப்பு குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது..
அதன்படி யூடியூப் பிரபலமும், சமூக வலைதளத்தளங்களில் ‘செத்த பயலயே நாரப்பயலே’ என பிரபலமான G.P. முத்து கலந்து கொள்ள போவதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
தனது வெள்ளந்தியான மற்றும் வெளிபடையான பேச்சால் ரசிகர்களிடம் பிரபலமான G.P.முத்து தற்போது ஓவியா மற்றும் சன்னிலியோன் உடன் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில்தான் இவர் பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொள்ளப்போவது உறுதியாகியுள்ளது.
இவரின் அப்பாவி தணமான பேச்சாலும் மற்றும் அனைவரையும் மகிழ்விக்கும் குணத்தாலும் இவர் இறுதி சுற்று வரை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.