கண்ணீர் மல்க பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஜி.பி.முத்து!..வெளியான வீடியோ...
டிக்டாக் ஆப் மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து. இவர் தூத்துக்குடி பகுதியை சேர்ந்தவர். இவரின் வெள்ளந்தியான பேச்சு மூலம் பலரையும் கவர்ந்தார். டிக்டாக் ஆப்புக்கு தடை விதிக்கப்பட்டதால் யுடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அதன்மூலம் அவருக்கு நல்ல வருமானமும் கிடைத்தது. அதோடு, சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் அவரை தேடி வந்தது.
மேலும், கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டில் முதல் போட்டியாளாக உள்ளே சென்றது இவர்தான்.
பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் வாரம் ஜாலியாக பொழுதை கழித்த ஜிபி முத்து, 2வது வாரத்திலிருந்து குடும்பத்தினர் நியாபகம் வந்துவிட்டதால் வெளியேற விரும்புகிறேன் என தொடர்ந்து பிக்பாஸுக்கு கோரிக்கை வைத்து வந்தார். அவரை பிக்பாஸ் சமாதானம் செய்து வீட்டில் தங்க வைத்தார்.
இந்நிலையில், நேற்று அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து அவர் வெளியேறியுள்ளார். மற்றவர்களிடம் விடைபெற்றுவிட்டு அவரை வெளியேற பிக்பாஸ் அனுமதித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்து 100 நாட்கள் தங்கி வெற்றிபெறுவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். சமூகவலைத்தளங்களில் அவருக்கு ஆதரவும் பெருகிய நிலையில், அவர் வீட்டை விட்டு வெளியேறியது அவரின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விடை பெற்றார் தலைவர் ????#GPMuthu #GPMuthuArmy #BiggBossTamil6 pic.twitter.com/JxvJV2NYSt
— RamSimbu Talks (@RamSimbuTalks) October 22, 2022