சிவாஜி படத்திற்காக ரெக்கார்டு பண்ண பாடல்! - எம்ஜிஆர் படத்தில் இடம்பெற்ற சம்பவம்.. எப்படி தெரியுமா?
தமிழ் சினிமாவில் இரு பெரும் ஜாம்பவான்களாக இருந்தவர்கள் நடிகர் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன். இவர்களுக்கென்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். இப்பொழுது எப்படி விஜய் அஜித் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்களோ அதே போல அந்த காலத்தில் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் சிவாஜி ரசிகர்களுக்கும் ஏகப்பட்ட போட்டிகள் வந்த வண்ணம் இருந்தன.
சிவாஜி படத்தில் பணியாற்றும் டெக்னீசியன்கள் எம்ஜிஆர் படத்தில் பணியாற்ற மாட்டார்களாம். அந்த அளவுக்கு இருவருக்கும் தனித்தனியான ஊழியர்கள் தான் பணியாற்றிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில் எம்ஜிஆர் நடித்த குலேபகாவலி படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் தான் இசையமைத்திருக்கிறார்கள்.
ஆனால் அந்தப் படத்தில் அமைந்த ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் கேவி மகாதேவன் தான் இசையமைத்திருந்தாராம். ஆனால் டைட்டில் கார்டில் அந்த பாட்டுக்கு கீழே எம். எஸ். வி, ராமமூர்த்தி பெயர்களை போட்டு தான் வெளியிட்டு இருந்தார்களாம். அந்தப் படத்தில் வரும் "மயக்கம் மாலை பொழுதே அருகில் வா வா" என்ற பாடல் தான் அது.
இந்த பாடல் ஏற்கனவே எம்ஜிஆர் சிவாஜி நடித்த கூண்டுக்கிளி என்ற படத்திற்காக இசையமைக்கப்பட்ட பாடலாம். அந்த பாடலை இசை அமைத்தவர் கே வி மகாதேவன். ஆனால் கூண்டுக்கிளி படத்தில் இந்தப் பாடலை பயன்படுத்தவில்லையாம். அதனால் குலேபகாவலி படத்திற்கு பயன்படுத்தலாம் என எம் எஸ் வி யிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு எம்எஸ்வி "அதற்கு என்ன அது என்னுடைய குருவின் பாடல் தான். அதனால் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என கூறிவிட்டாராம்.
அதேபோல கேவி மகாதேவனிடமும் போய் கேட்டிருக்கிறார்கள். அவரும் என் சிஷ்யர்களுக்காக நான் அதை பயன்படுத்த சம்மதிக்கிறேன் என்றும் கூறினாராம். மேலும் அந்த பாடலில் மட்டும் உங்கள் பெயரை நாங்கள் போட்டு வெளியிட்டுக் கொள்கிறோம் என கூறி இருக்கிறார்கள் .ஆனால் அதற்கு கேவி மகாதேவன் "வேண்டாம் என் இலவல்களுக்காக இருக்கட்டும். அவர்கள் பெயரையே போட்டுக் கொள்ளுங்கள்" என்று கேவி மகாதேவன் கூறிவிட்டாராம்.