குணா ஃபிளாப் ஆக காரணமே இதுதான்!.. உண்மையை ஓப்பனா ஒத்துக் கொண்ட ஏஜென்ட் உப்பிலியப்பன்!..

Published on: March 2, 2024
---Advertisement---

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு குணா படம் பற்றிய பேச்சுக்கள் ஊர் முழுக்க கிளம்பி உள்ளது. விக்ரம் ஏஜென்ட் உப்பிலியப்பனாக 2கே கிட்ஸ்களுக்கு அறியப்பட்ட சந்தான பாரதி தான் குணா படத்தின் இயக்குநரா என்பதையே மஞ்சுமெல் பாய்ஸ் ஹிட் அடித்த பின்னர் தான் அனைவரும் அறிந்துக் கொண்டனர்.

அந்த காலத்தில் எந்தவொரு வசதியும் இல்லாமல் கொடைக்கானலில் ஒரு ராட்சத குகையை கண்டுபிடித்து கமல்ஹாசன் குணா படத்தில் நடித்த நிலையில், அதையெல்லாம் இப்போது கூட செய்வது கடினமான விஷயம் என மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: நைட்ல திருட்டுத்தனமா சின்மயி பண்ண வேலை!.. லோகேஷ் கனகராஜும் சிக்கிட்டாரு.. ராதா ரவி பளிச்!..

அந்த படம் 60 கோடி வசூலை எட்டியுள்ள நிலையில், அதற்கு காரணமே குணா படத்தில் உள்ள “கண்மணி அன்போடு காதலன்” பாடலை சரியான இடத்தில் இயக்குநர் வைத்து தான் என சந்தான பாரதி கூறியுள்ளார்.

அந்த காலத்தில் குணா படம் ஏன் ஓடவில்லை என்கிற கேள்விக்கு குணா படம் ரஜினிகாந்தின் தளபதி படத்துடன் கிளாஷ் விட்டது தான் அந்த படம் ஃபிளாப் ஆக காரணம் என்கிற உண்மையை வெளிப்படையாக சந்தான பாரதி ஒப்புக் கொண்டார்.

இதையும் படிங்க: அடுத்த ஸ்டார் கிட் ரெடி… மகனை சினிமாவில் களமிறக்கும் தனுஷ்… எந்த படத்தில் தெரியுமா?

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி, அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான தளபதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், குணா படம் படு தோல்வியை சந்தித்தது. ஆனால், கமல்ஹாசனின் முயற்சிக்கு பல ஆண்டுகள் கழித்து தற்போது பலன் கிடைத்திருக்கிறது.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.