More
Categories: Cinema History Cinema News latest news

வசூல் ரீதியாக கமலின் தோல்வி படம் என்ன தெரியுமா?!! என்ன தல!! பாட்டெல்லாம் கொண்டாடுனீங்க…

கமல் நடித்ததிலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வி படமாக அமைந்த ஒரு படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கமல்ஹாசன்

தமிழில் 1960ம் ஆண்டில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக 6 திரைபடங்களில் நடித்துள்ளார். பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த அரங்கேற்றம் திரைப்படம் மூலம் ஹீரோவாக தமிழில் ப்ரோமோட்டானார்.

Advertising
Advertising

கமல்ஹாசன்

மலையாளத்தில் கன்னியாகுமரி படத்தின் மூலம் முதன் முதலாக கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம். இப்படம் அவருக்கு முதல் பிலிம்பேர் விருது பெற்று கொடுத்தது. தமிழில் தனது 25வது படமான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் தான் முதல் பிலிம்பேர் விருது வென்றார்.

தொடர்ச்சியாக சினிமாவில் கொடிக்கட்டி பறந்த கமல், கோலிவுட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய பங்காக இருக்கிறது. பல வருட இடைவேளைக்கு பிறகு சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூல் சாதனையை படைத்தது.

கமல்ஹாசன்

இந்நிலையில், கமலின் குணா படம் தான் அவரின் சினிமா கேரியரில் மோசமான ஃபளாப் படம் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. 1991 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் குணா. சந்தான பாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரேகா, ரோஷினி, ஜனகராஜ் நடித்துள்ளனர். அதே நாளில் வெளியான ரஜினிகாந்தின் தளபதி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படத்தின் பாடல்கள் இன்னும் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் ரசிக்கப்பட்டு வருகிறது என்பதே நிதர்சனம்.

Published by
Akhilan

Recent Posts