Cinema History
சிவாஜி படத்தில் நான் நடிச்ச காட்சிகளை நீக்கிட்டாங்க… ஆதங்கப்பட்ட காமெடி நடிகர்!..
பராசக்தி திரைப்படம் மூலமாக அறிமுகமான பிறகு சிவாஜி கணேசனுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட் உருவானது. அதற்கு பராசக்தி திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய தனிப்பட்ட நடிப்பே காரணமாக இருந்தது.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்கள் என்றால் அது எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும்தான் என்கிற நிலை இருந்தது. இந்த நிலையில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசனுடன் நடிப்பது மூலம் எளிதாக பிரபலமடைய முடியும் என நடிகர்கள் நினைத்தனர். எனவே அவர்களோடு நடிக்கும் வாய்ப்புகளுக்காக காத்திருந்தனர்.
அரசியலுக்கு வந்த பிறகு எம்.ஜி.ஆர் நடிப்பை விட்டு விலகி விட்டார். அதன் பிறகு சிவாஜி கணேசன்தான் வெகு காலம் சினிமாவில் நடித்து வந்தார். சிவாஜி கணேசனோடு ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்பது அடுத்த தலைமுறை நடிகர்களின் பெரும் ஆசையாக இருந்தது.
சிவாஜியுடன் கிடைத்த வாய்ப்பு:
ஒருமுறை நடிகை சுஹாசினி கூட தனது பேட்டியில் கூறும்போது சிவாஜி கணேசனோடு ஒரு படம் கூட நடிக்கவில்லை என வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அப்போது பிரபலமான காமெடி நடிகராக இருந்த குண்டு கல்யாணத்திற்கு சிவாஜி கூட நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது.
இந்த நிலையில் 1987 ஆம் ஆண்டு அன்புள்ள அப்பா என்கிற படத்தை இயக்குனர் திருலோக சந்தர் என்கிற இயக்குனர் இயக்கினார். ஏ.வி.எம் இந்த படத்தை தயாரித்தது. சிவாஜி கணேசனும், நதியாவும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
இந்த படத்தில் காமெடியனாக நடிப்பதற்கான வாய்ப்பை குண்டு கல்யாணம் பெற்றார். அவருக்கு அதிக காமெடி காட்சிகள் இருந்தன. அவரும் மிகவும் மகிழ்ச்சியாக நடித்து கொடுத்தார். ஆனால் படம் வெளியாகும்போது அவருக்கு ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக அந்த காமெடி காட்சிகளில் பலவும் படத்தில் இடம் பெறாமல் இருந்துள்ளது. இதுக்குறித்து பேட்டியில் பேசிய குண்டு கல்யாணம் மிகவும் வருத்தப்பட்டார்.
இதையும் படிங்க: விஜயகாந்தை எம்.ஜி.ஆரிடம் நான்தான் அறிமுகம் செய்தேன்!.. ரகசியம் சொன்ன நடிகர்…