தமிழ் சினிமாவில் விவாகரத்து என்பது அடுத்தடுத்து நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. தனுஷ் ஐஸ்வர்யா இவர்களைத் தொடர்ந்து ஜெயம் ரவி ஆர்த்தி, ஜிவி பிரகாஷ் சைந்தவி தற்போது ஏ ஆர் ரகுமான் சாயிரா என மிகப் பிரபலமானவர்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்தியை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிய நிலையில் ஜிவி பிரகாஷ் சைந்தவி நாங்கள் இருவரும் பிரிய போகிறோம் என முடிவு எடுத்து சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி பி பிரகாஷ்.
இவர் பல சூப்பர் ஹிட் பாடல்களை இந்த தமிழ் சினிமாவிற்காக கொடுத்து வருகிறார் ஆடுகளம் படத்தில் அவரது இசை பலராலும் பாராட்டப்பட்டது. அதிலிருந்து ஜிவி பிரகாஷை மக்கள் அறிய ஆரம்பித்தனர். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த ஜிவி பிரகாஷ் அடுத்து ஹீரோவாக அறிமுகம் ஆகி பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்த தனது மனைவி சைந்தவியை 11 வருடங்களுக்கு முன்பு கரம் பிடித்தார். இருவரின் வாழ்க்கையும் சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. இவர் எப்போது ஹீரோவாக படங்களில் நடிக்க ஆரம்பித்தாரோ அதிலிருந்து இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு தான் இவர்கள் பிரியப் போகிறோம் என கூறினர் .
இந்த நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் இணையப் போகிறார்கள் என்ற ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அதாவது வரும் டிசம்பர் 7ஆம் தேதி மலேசியாவில் நடக்க இருக்கும் ஜிவி இசை கச்சேரியில் சைந்தவி பாட போவதாக அறிவித்திருக்கிறார் . இதிலிருந்து இவர்களுக்குள் இருக்கும் புரிதல் நன்றாகவே தெரிகிறது.
டிவி பேட்டி…
தமிழ் சினிமாவில்…
Kamalhaasan: 4…
SK 25:…
பிலிம் இன்ஸ்டிட்யூட்…