
Cinema News
ஜி.வி.பிரகாஷிற்கு அடித்தது பாலிவுட் ஜாக்பாட்.! இனி சின்ராச கையில் புடிக்க முடியாதே.!
தமிழ் சினிமாவில் தனது துறைகளிலும் சாதிப்பவர்கள் வெகு சிலரே. சிலர் நடிப்பை விடுத்து வேறு துறைக்கு வந்தால் இதில் வாய்ப்புகள் குறையும், சிலர் இசையை விட்டு, நடிப்புக்கு சென்றால் இசையமைப்பாளர் வாய்ப்பு குறையும். ஆனால் ஜிவி பிரகாஷ் இதில் வேற ரகம் தான்.
தனது இசை துறையிலும் சரி, நடிப்பிலும் சரி சிறந்து விளங்கி வருகிறார். அடுத்தடுத்து, பல சூப்பர் ஹிட் பாடல்களை அடுத்தடுத்து படங்களில் கொடுத்து வருகிறார். அதே போல தனது நடிப்பின் மூலம் நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இவர் சூரரை போற்று இந்தி ரீமேக்கை நடிகர் அக்ஷ்ய் குமாரை ஹீரோவாக வைத்து சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் ஜிவி பிரகாஷ் ஹிந்தியில் இசையமைப்பாளராக களமிறங்க உள்ளார். இவரின் இசையை கவனித்த இன்னோர் பாலிவுட் இயக்குனர் இவருக்கு இசை வாய்ப்பு தர தயாராக இருக்கிறாராம்
இதையும் படியுங்களேன் – பிள்ளையை எப்படி வளர்த்திருக்கார்னு பாரு.! கார்த்தி பற்றிய உண்மைகளை கூறிய பிரபல நடிகர்.!
3 இடியட்ஸ் , பிகே , சஞ்சு என மெகா ஹிட் படங்களை இயக்கிய ராஜ்குமார் கிராணி அடுத்ததாக, ஷாருக்கானை ஹீரோவாக வைத்து டங்கி எனும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு இசையமைக்க ஜீவியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் ஷாருக்கான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்று கூறினாலும் ஆச்சர்யமில்லை.